பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Сезмы:В часотестого апар попё25цыo 3 போட்டி தொடங்கியது. கைகளை நீட்டி, ஒருவரை ஒருவர் அழுத்தி தரையில் வீழ்த்த முயன்றனர். இரும்புபோன்ற தனது கால்களை எதிரியின் கால்களுடன் இணைத்து எதிரியை எதிரி தடுமாறி விழுமாறு செய்தனர். இந்த மற்போர்களைப் பார்த்து பரவசம் அடைந்த மன்னரும் மக்களும் அப்பொழுதைக்கு அப்பொழுது மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பல பிடிகளையும் உத்திகளையும் இரு மல்லர்களும் முயன்றும் ஒருவரை ஒருவர் வீழ்த்த முடியாத நிலையில் இராஜசிங்கமங்கலம் பயில்வான் எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்ததும் ஆப்பனுார் பயில்வான் அவர்மீது பாய்ந்து அழுத்தி எழுந்திருக்க முடியாமல் செய்ததுடன் எதிரியின் காலுடன் தனது காலையும் பிணைத்தவாறு அவர் முதுகைப் புரட்டி தள்ளினார். அடுத்து, ஆப்பனுளர் தேவரது முயற்சி வெற்றி பெற்றுவிடும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் உசேன் பயில்வான் தம்மீது படுத்து அழுத்திக் கொண்டிருந்த எதிரியின் கழுத்தில் தனது இடதுகையை கோர்த்துப் பிடித்து வலதுகையினால் எதிரியின் இடுப்பில் பலமாக அழுத்தி நொடி நேரத்தில் எதிரி மல்லாந்துவிடுமாறு செய்தார். அவர் மார்பு மீது அழுத்தி அவரது முதுகு தரையில் கிடந்த மண் ஒட்டுமாறு செய்துவிட்டார். வெற்றி உசேன் பயில்வானுக்கு. அவ்வளவுதான் மக்கள் ஆரவாரம் செய்தனர். உசேன் பயில்வான் பிடியைத் தளர்த்தி தேவர் எழுந்திருந்த-வுடன், உசேன்பாய் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த ஜோடிகள் : சாயல்குடி சுந்தரம்பிள்ளை, பரமக்குடி பங்காரு நாயக்கர், நாலு கோட்டை பெரியாண்டித் தேவர், அனுமந்தக்குடி கருப்பையா அம்பலம்,