பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 எஸ். எம். கமால் " பொதுவாக அவ்விதம் செய்வது இல்லை. இது ஒரு பிரத்தியோக நிகழ்ச்சியாகத் தெரிகிறது. ஒருவேளை, கிட்டங்கியில் இருப்புக் கொள்ளாத வகையில் கூடுதல் இருப்பு கைவசம் இருந்து இருக்க வேண்டும். அல்லது சந்தை விலைக்கு கூடுதலாக விலை கொடுக்கும்பொழுது இருப்பை நல்ல இலாபத்திற்கு விற்று இருக்க வேண்டும். நாளை அவர்களது ஆராய்ச்சிக்கு ஒரு ஒலை அனுப்பி விபரம் விசாரிக்கின்றேன்." "தனியார் நமது பகுதிக்காரர் இவ்வளவு கருமருந்தை வாங்கியதன் நோக்கம் என்னவாக இருக்கும்?" "தனியாருக்கு இவ்வளவு அளவு கருமருந்தை தேவை இராது. ஆதலால் பாளையக்காரர் ஒருவருக்காகத்தான் வாங்கி இருக்க வேண்டும், என நினைக்கிறேன். . . . மேலும் துப்பாக்கி அணியைக் கொண்டுள்ள பாளையக்காரர் எனக்குத் தெரிய எவரும் நமது சீமையிலும், அடுத்துள்ள மதுரைச் சீமையிலும் இல்லை." மிகவும் யோசனை செய்தவாறு இதனை மன்னருக்குத் தெரிவித்தான் பிரதானி. "உங்களது கருத்தில் பாளையக்காரர் யாரும் இல்லை என்று முடிவு செய்து விட்டீர்கள். புதிய கலகக்காரர்களுக்காகவும் இந்த கொள்முதல் நடந்து இருக்கலாம் அல்லவா?" " வாஸ்தவம்தான் மகாராஜா! நமது ஒற்றர்களை உஷார்படுத்தி மறைமுகமாக விசாரணையை நடத்தச் சொல்ல வேண்டும்." "உடனே செய்யுங்கள்" மன்னர் உத்தரவிட்டார். சிறிது நேரம் மன்னர் அமைதியாக இருந்து சிந்தித்துக் கொண்டிருந்தார். பிறகு எழுந்து நீராவி அரண்மனைக்குப் புறப்பட்டார். மரியாதை நிமித்தம் பிரதானியும், கார்வாரும் அந்தப்புர முகப்பு வரை மன்னருடன் சென்றுவிட்டு திரும்பினர். 橡發發