பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 எஸ். எம். கமால் பாடியவாறு நின்றுகொண்டிருந்தனர். அவர்களது அருகில் இராமநாதபுரம் ராஜ நர்த்தகி கலாதேவியும் நின்று கொண்டிருந்தாள். எளிமையான முறையில் புத்தாடை புனைந்து மிகவும் பவ்யமாக கருவறையின் கதவுகள் திறக்கப்படுவதை எதிர்பார்த்த காத்துக் கொண்டிருந்த அவளது முகத்தில் ஒருவகையான ஆத்ம திருப்தி நிறைந்து இருந்தது. பக்தி என்பது உள்ளத்தின் அடித்தளத்தில் உதித்து விடும் வானவில்லின் ஒளிக்கற்றைதானே. அதன் அற்புத வெளிப்பாடு முகத்திரை அல்லவா! இதோ சங்கு முழங்குகிறது. சேகண்டி ஒலிக்கிறது. கோவில் பசு ஒன்று அங்கு நின்றுகொண்டிருக்கிறது. கதவுகள் மெல்லத் திறக்கப்படுகின்றது. சர்வாங்கிதபூஷகராக காட்சியளிக்கும் சுந்தரராஜப் பெருமாளுக்கு சாத்தப்பட்டிருக்கும் துளசி மாலையின் நெடி அந்த இனிய காலையில் குழலில் எங்கும் பரவி மனம் வீககிறது. பூஜகர் வழக்கமான பூஜை நைவேத்திய சோடச தீப உபச்சாரங்களை நிறைவேற்றியதை கண்குளிரக் கண்டு வணங்கி ஆனந்தித்த கலாதேவி, அவளது பணிப்பெண்கள் வைத்து இருந்த ரோஜா மலர் மாலையையும் பெருமாளுக்குள் சாத்துமாறு கொடுத்தனர். தொடர்ந்து ஒர் தட்டில் விரித்த மஞ்சள் துணியில் நீலநிற பட்டு அங்கவஸ்திரம் ஒன்றையும் பொன்மாலை ஒன்றினையும் வைத்து கொடுத்து அவைகளையும் பெருமாளுடைய பாதார விந்தங்களில் காணிக்கையாக சமர்ப்பிக்குமாறு பூஜகரை வேண்டிக்கொண்டாள். அடுத்து, வழக்கம் போல் துளசியையும், தீர்த்தத்தையும் சடாரி மரியாதையும் மிகுந்த பணிவுடன் பெற்றுக் கொண்ட பிறகு, அவளும், அவளது பனிப் பெண்களும கருவறையை ஒட்டிய அர்த்த மண்டபத்தில் ஒர் பகுதியில் அமர்ந்து பாகவத நாம சங்கீர்த்தனங்