பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் 151 களை மெதுவாக முழக்கத் தொடங்கினார். தொடர்ந்து சூடிக் கொடுத்த நாச்சியாரின் பாசுரங்கயுைம் இனிமையாகப் பாடத் தொடங்கினர். பெருமாளைச் சேவித்து திரும்பும் பக்தர்கள் சிலர் அந்த இனிய பாசுரங்களை சிறிது நேரம் நின்று கேட்டு மனமகிழ்ந்தவர்களாகச் சென்றனர். அப்பொழுது அங்கு வந்த இளந்துறவியொருவரும் அவர்களுடன் இணைந்து திவ்ய பிரபந்தம் பாசுரங்களை, தேனில் நனைந்து வருவது போன்ற குரலில் பாடினார். நல்ல உயரமும் கட்டான உடல்வாகும் கொண்ட அந்த துறவிக்கு சுமார் முப்பது வயது தான் இருக்கும். கழுத்துவரை தொங்கி வளைந்த முடியுடனான தலை, விசாலமானநெற்றி. அதன் நடுவில் இடப்பருந்த ஊசி உருவம் போல திருநாமம் அந்த நெற்றிக்கு அழகூட்டியது. அவரை ஒருமுறை உற்றுப் பார்த்த கலாதேவி தொடர்ந்து பாராயணத்தில் ஈடுபட்டாள். உச்சிகால பூஜைக்கான மணி ஒலித்தது. பூஜையும் நடைபெற்று முடிந்தது. மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து பாராயணத்திலும் பாகரங்களைப் பாடுவதிலும் ஈடுபட்டனர். அந்த இளந்துறவியும் அவ்விதமே செய்தார். பிற்பகலின் இறுக்கம் குறைந்து மாலைப்பொழுதாகி பகல் நேரம் நெகிழ்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது கலா தேவி குழுவினர் பல்லாண்டு பாடி தங்களது பாராயணத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர். எழுந்து போய் மூடப்பட்டிருந்த சன்னிதானத்தின் நிலைப்படியை தொட்டுக் கும்பிட்டனர். அந்த துறவியும் அவ்விதமே செய்து முடித்தார். பூஜைக்காக கொண்டு வந்த பாத்திரங்கள், பொருட்கள். விரிப்புகள் ஆகியவற்றை கோயில் வாசலுக்கு அப்பால் இருந்த பல்லாக்கில் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தனர். கலாதேவியின்