பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 எஸ். எம். கமால் இருப்பணிப் பெண்களும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவகையாக மனதை திடப்படுத்திக்கொண்டு கலாதேவி அவரைக் கூர்ந்து நோக்கினாள். பின்னர் அவரிடம் கேட்டாள். " சுவாமி எங்களது பயணம் தொடருகிறது. அதற்கு முன்னர் தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இன்று காலையில் இங்கு வந்த பொழுது எனது இதயத்தில் நிறைந்து இருந்த ஒரு பரிசுத்தமான அமைதியை தங்களது அமிர்தவர்ஷினி போன்ற குரல் இனிமை நிறைவடையச் செய்தது. அதற்காக நான் தங்கட்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்." இளந்துறவியின் பதில் சொன்னார். " தேவி நான் சேது நாட்டைச் சார்ந்த ஒரு வழிப்போக்கன். எனது பயணத்தில் ஒவ்வொரு மாதமும் வருகின்ற எனது ஜென்ம நட்சத்திரமான ரோகிணி நாள் அன்று பெரும்பாலான பொழுதை ஏதாவது ஒரு திருக்கோயிலில் கழிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இந்தப் பெருமாளிடம் வந்தேன். அவரது ஜென்ம நட்சத்திரமும் ரோகிணிதானே! அதனால் தான் தங்களுடன் சேர்ந்து கொண்டு நாலாயிர பிரபந்த பாசுரங்களைப் பாடினேன் அவ்வளவுதான்." அவரது பதிலினால் வியப்படைந்த கலாதேவி சொன்னாள். "ஆகா. வா ழ்க்கை எவ்வளவு வினோதமானது.எனது ஆண்டின் ஜென்ம தினத்தன்று இந்தப் பெருமாளின் சன்னிதானத்தில் கழிப்பதையே ஒரு சிறந்த பாக்கியமாக கடந்த எட்டு ஆண்டுகளாக செய்து வருகிறேன். அதே போல், தாங்களும் மாத ஜென்ம நட்சத்திரத்தை இறைவனது சன்னிதியில் கழித்து வருவதை அறிய மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சுவாமி எனது இந்த புனித பிறந்த நாளன்று என்னை ஆசிர்வதியுங்கள்."