பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 153 "தேவி எனது தோற்றத்தை கண்டு ஆசீர்வதிக்கும்படி என்னிடம் சொல்கிறீர்கள். அந்த அளவிற்கு எனக்குத் தகுதியில்லை. இன்னும் எனக்குத் திருமணம் ஆகவில்லை. வயதும் குறைவுதான். பிரம்மச்சாரியாகிய நான் தங்களது மகிழ்ச்சியில் பங்கு 'காள்கிறேன்". இளந்துறவி புன்னகை செய்தவாறு பதில் சான்னார். "தங்கள் வாழ்க்கையில் முதல் நிலையில் இருக்கும் பொழுதே தங்களுக்கு இறைவன் எவ்வளவு பெரிய பக்தி உள்ளத்தையும் அதற்கு மேலாக அவனை குழைந்து பாடிப்பரவசமும் பெற குரல் இனிமையையும் கொடுத்து இருக்கிறான்" என்று கலாதேவி பேச்சை முடிப்பதற்குள் இளந்துறவி, "தங்களுக்கு ஆடும் திறனை அளித்த அதே இறைவன் தான் எனக்குப் பாடும் திறனையும் வழங்கி அருள் பாலித்து இருக்கிறான். எல்லையற்ற கருணையாளன் அல்லவா அவன்"என்று சொன்னார். மிகுந்த வியப்பிற்குள்ளான கலா தேவி கூறினாள். " என்னைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறீர்களே இன்று தானே உங்களை சந்தித்து இருக்கிறேன். உங்களது குரல் இனிமையை அனுபவித்து இருக்கிறேன். அதற்குள்ளாக என்னைப்பற்றி" "சென்ற மாதம் இராமேஸ்வரம் திருக்கோயிலில் தங்களது நடனத்தினை-அல்ல. காலதில் சுழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி, ஞாலமும் குழியநின்று ஆடிய தில்லைக் கூத்தனது ஆனந்த கூத்தையல்லவா கண்டு ஆனந்தம் கொண்டேன். தங்களைப் போன்ற சிறந்த நர்த்தகி ஒருவரின் சிவ நடனத்தைக் கண்டு களித்தவன் நான். அப்பர் பெருமாள் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தில் எனப் பாடினார்"."