பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 எஸ். எம். கமால் "தங்களுக்கு இசையில் உள்ள ஈடுபாடு தங்களுக்கு கூத்திலும் அல்லவா இருக்கிறது." என்று சொல்லியவாறு கலாதேவி மென்மையான மலர் தென்றலில் சொக்குவது போலச் சிரிக்காள். இளந்துறவியும் இனைந்து சிரித்தார். அப்போது பல்லக்கு போகிகள் தயாராக இருப்பதை பணிப்பெண் வந்து கலாதேவியிடம் மெதுவாக தெரிவித்தாள். "இப்பெழுது நாங்கள் இராமநாதபுரம் புறப்படுகிறோம். இறைவன் கருனையினால் மீண்டும் சந்திப்போம். நமஸ்காாம்" அவளது வாய் சொன்னதே தவிர அதற்கு அவளது இதயம் உரிய அனுமதி அளிக்கவில்லை என்பதை அவளது முகக்குறிப்பு தெரிவித்தது. அந்த ஒரு பகற்பொழுது பரிச்சயம் அவர் மீது பாசத்தை வீசி பலமாக பற்றி இருந்தது. இசையில் இளகாத பொருள் எது? "சென்று வாருங்கள்." இளந்துறவியும் அவளுக்கு விடை கொடுத்து விட்டு அவர்கள் கோயில்வாசல்வரை செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார். கலாதேவியும் பல்லக்கிற்குள் நுழையும் முன் பார்த்தாள். மீண்டும் ஒரு முறை. முருகிற் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும் திருகிச் சொருகும் பார்வையல்லவா அது Чё ЧК ЧК ЧК Чқ இராமநாதபுரம் அரண்மனை விருந்து மண்டபத்து அறையில் சேதுபதி மன்னர் அமர்ந்து இருந்தார்.