பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 155 சேது இன்று என்ன விஷேசம் 2 இனிப்புகள் நிறைந்து இருக்கின்றனவே?. மன்னர் ராணியிடம் கேட்டார். - "மறந்து விட்டீர்களா என்னையே மறந்துவிடுவீர்களே கலாவின் நினைவு எங்கே இருக்கப்போகிறது" "ஒகோ ராணியரது உடன் பிறவாச் சகோதரியின் ஜென்மதினமாயிற்றே இன்று" அதற்காக அரண்மனையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏதாவது ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா சிரித்துக் கொண்டே கேட்டார் மன்னர். ייש "எல்லாம் உங்களுக்கு வேடிக்கையாகத்தான் தோன்றும். இன்று மாலையில் திருப்புல்லானி ஜெகநாதசாமி கோவிலில் கலாவின் ஆயுஸ் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறேன்" "பேஷ் தங்கை கூடல்அழகர் பெருமாள் கோவில் சன்னதியில் சேவை. சகோதரி திருப்புல்லாணி பெருமாள் ஆலயத்தில் வழிபாடு. பொருத்தமான ஏற்பாடு ஆகா! சகோதர வாஞ்சையை இங்கேதான் காணவேண்டும்!"மீண்டும் மன்னரது குறும்பான பேச்சு, "போதும் பரிகாசம். இதோ இந்தப் பலகாரத்தை சாப்பிட்டு விட்டு பாயசத்தையும் குடித்துவிடுங்கள். நமது சமையல்காரது கைவரிசை அதில்தான் அமைந்து இருக்கிறது." ராணி சொன்னார். "உங்கள் ஒவ்வொருவரது கைவரிசையும் பார்த்தால் எனது வயிறு என்னாவது?" என்று மன்னர் சொன்னவுடன் ராணியும் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த சமையற்காரரும் சேர்ந்து சிரித்தனர்.