பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 எஸ். எம். கமால் மன்னர் இருக்கையில் இருந்து எழுந்தார். சமையல்காரர் தண்ணிர் செம்புடன் மன்னரைப் பின் தொடர்ந்து கையலம்புவதற்கு உதவி செய்தார்." அடுத்து மன்னருடன் ராணியாரும் படுக்கை அறைக்குச் சென்றார். அவரது கையில் சிறிய தங்கத் தாம்பூலத் தட்டு ஒன்று இருந்தது. மன்னர் படுக்கையில் அமர்ந்தவுடன் அருகில் அமர்ந்த ராணியார் தாம்பூலத் தட்டை மன்னரிடம் நீட்டினார். "சேது நீ சாப்பிடவில்லையே!..." "இன்று விரதம் மாலை பூஜை முடிந்தவுடன் இரவில் தான் சாப்பாடு" என்று ராணி பதில் சொன்னார். " அப்பப்பா என்ன பாசம் சகோதரிக்காக உபவாசம் நான்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பந்த பாசங்களை பரிமளிக்கச் செய்யும் குழந்தைப் பேறு இல்லாத நிலையில் அதனை போற்றிப் பாராமரிக்கப் இப்படியொரு தங்கையையாவது உனக்கு ஆண்டவன் அளித்து இருக்கிறானே, அதற்காக நாம் சந்தோசப்பட வேண்டியதுதான்" என்று சொல்லி நிறுத்திய மன்னர், "எனக்கு உன்னைப் போன்ற இன்னொரு சேதுவைக் கொடுக்கவில்லையே" என்று குறும்பாகச் சொன்னார். " ஆமாம் உங்களுக்கு எல்லாற்றிலும் கேலியும் நையாண்டியும் தான். இந்த ஒருத்தியுடன் இந்து நிமிடம் ஆறுதலாகப் பேசுவதற்கு நேரம் கிடைக்காத உங்களுக்கு, இன்னொரு சேதுநாச்சியார் அவசியம்தான்". மன்னரைப் பரிகாசம் செய்தார் ராணியார்,