பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 157 அத்துடன் பேச்சை முடிக்காமல், "தந்தை, தாய், கணவன், மனைவி, குழந்தை, உடன்பிறப்பு என்பதெல்லாம் என்ன? அன்பின் மாற்று வடிவங்கள்தானே...." ராணியார் தொடர்ந்தார். "வைகை ஆற்றை திருப்புவனத்திற்கு அருகில் பார்க்கும் பொழுது அகண்ட காவேரியாய், காட்சி தருகிறது. பரமக்குடி தாண்டியுடன் ஒடுங்கிப் போன கால்வாயகவும் இன்னும் ஆற்றாங்கரை சங்கமமாகும் போது ஒரு சாதாரான வாய்க்கால் போலத்தானே காட்சி அளிக்கிறது. ஆனால் மதுரையிலிருந்து இந்த நீண்டவெள்ளப்பிரவாகத்திற்கு பெயர் வையைதானே. அதுபோலத் தான் நாம் போற்றி வரும் நம்மை தொடர்ந்து வரும் பாசம், நட்பு, சொந்தம், அனைத்துமே அன்புதான். அதனால் தானே என்போடு -- இணைந்த உடலுக்கு அன்போடு இயைந்த வழக்கு என்றார் வள்ளுவர்." ராணியார் பேச்சை முடித்தவுடன், "கடந்த ஒரு வருடத்தில் கலாதேவி, ராணியாருக்கு பரதநாட்டியம் பற்றி சொல்லிக் கொடுத்து இருப்பாள் என நினைத்தேன். ஆனால் நன்கு வேதாந்த, சித்தாந்த விளக்கம் அல்லவா போதித்து இருக்கிறாள். பரவாயில்லை" என்று மன்னர் சொன்னார், புன்னகை செய்தவாறே, "போதும் தங்கள் பாராட்டு. நான் வருகிறேன். அமைதியாகத் துரங்கி எழுந்திருங்கள்." ராணியார் அந்த அறையை விட்டு வெளியில் வந்தார் மன்னரும் வழக்கம் போல் பிற்பகல் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார். 鬱鬱醬