பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எஸ். எம். கமால் பெருமாள் தேவன் பட்டி வீரக்காளைத் தேவர், சாத்தனுார் சண்முகம் அம்பலம். முதல் கற்றில் வெற்றி பெற்றவர்கள் உசேன் பயில்வான், கந்தரம் பிள்ளை, கருப்பையா அம்பலம் ஆகியவர்கள். இரண்டாவது சுற்றில் உசேன் பயில்வானும் கருப்பையா அம்பலமும் வெற்றி பெற்றனர். இறுதிச் சுற்றில் உசேன் பயில்வானும் கருப்பையா அம்பலமும் ஒருவரை ஒருவர் வெற்றிகொள்ள முடியாமல் நீண்ட நேரம் விளையாடினர். வேறு வழியில்லாமல், சேதுபதி மன்னர் இருவரையும் வெற்றியாளர்களாக அறிவித்து இருவருக்கும் பொற்பதக்கமும், பொற்சங்கிலியும் அணிவித்து சிறப்புச் செய்தார். மிகுந்த ஆரவாரத்திற்கிடையில் முற்பகல் நிகழ்ச்சி முடிவு பெற்றது. மாலை நிகழ்ச்சியைப் பார்க்க மக்கள் குழுமி இருந்தனர். பன்னிரண்டு விளையாட்டு வீரர்கள், அழகிய வண்ணக் கச்சை அணிந்து நீண்ட மூங்கில் கழிகளுடன் நின்று கொண்டு இருந்தனர். மக்களும் மன்னரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். சிறிது நேரத்தில், பிரதானி, ராயசம், மெய்க்காப்பாளர், அடைப்பம், ஆகியவர்களுடன் மன்னர் வந்து, இருக்கையில் அமர்ந்தார். அனைவரும் மன்னரை வணங்கியதும் போட்டி தொடங்கியது) ராயசம் போட்டியாளர்களை இருவர் கொண்ட ஆறு அணிகளாகப் பிரித்தார். ஒவ்வொரு குழுவைச் சேர்ந்த இருவரும் முதலில் தங்க. ளுக்குப் பிடித்தமான சிலம்ப விளையாட்டை ஆடி காண்பிக்க வேண்டியது. பின்னர் மைதானத்தில் இடம் பெற்றிருந்த நேர் கோட்டிற்கு இருபுறமும் நின்றுகொண்டு, கையில் பற்றியுள்ள