பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 159 திருமெய்யம், திருப்பத்துரர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள உணவுப் பொருள் தட்டுப்பாடு சம்மந்தமாக, தொண்டி சுந்தரபாண்டிய பட்டினம், அறந்தாங்கி பன்டக சாலைகளில் இருந்து தானியங்களை உடனடியாக அனுப்புவதற்கு உத்தரவிட்டார். ஜீவித மானியம், கோவில் மானியம், உதிரப்பட்டி, அரண்மனை சேவகம் கோரி வந்துள்ள வேண்டுகோளை அந்தந்த கோட்டைக்குச் சேர்வைக்காரர்கள் விசாரித்து தக்க ஆணை வழங்கும்படியும் உத்தரவிட்டார். கண்டதேவி சீமை வெளிமுத்தியிலும் கமுதைச் சீமை கமுதையிலும் அன்றாட பூஜைகள் இல்லாமலும். பராமரிப்பு இல்லாமலும் அழிந்து வரும் திருக்கோயில்களையும், பிடாரி சேரி சத்திரத்தையும் பராமரித்து வர உரிய செலவுகளுக்கு ஆனைகள் வெளியிட்டார். அடுத்து, நம்புதாழை கடற்கரையில், கருமருந்துப் பொதிகளை இறக்க முயற்சி செய்தவர்களைப் பிடிக்க முயன்ற பொழுது அவர்கள் தப்பியோடிய செய்தியைத் தெரிவித்துள்ள தொண்டி சேர்வைக்காரரது ஒலையைப் படித்த பொழுது மன்னர் மிகவும் ஆத்திரமடைந்தார். இதுவரை நடைபெற்ற கொலை முயற்சிகள், யாழ்ப்பாணத்தில் வெடிமருந்து கொள்முதல் ஆகிய செய்திகளுடன் இப்பொழுது நம்புதாழை செய்தியையும் இணைத்துப் பார்த்தார்." "நமது நாட்டிற்குள் தமக்கு எதிராக சதிகாரர்கள் செயல்பட்டு வருகிறார் என்பது தெளிவாகிவிட்டது. ஆதலால் இனியும் மெத்தனமாக இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்." மன்னரது பேச்சில் அதுவரை இல்லாத கடுமை தொளித்தது.