பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 எஸ். எம். கமால் "உளவுத்துறையை நேரடியாக இனிமேல் நானே *. கவனிக்கிறேன். கோட்டைப்பட்டினம் முதல் ஒப்பிலான் வரையான 'கடற்கரையை உன்னிப்பாக கவனித்து வரவும் ஏற்பாடு செய்கிறேன் மகாராஜா." பிரதானியில் சமாதானத்தை ஏற்றுக் கொண்டவராக மன்னர் காணப்பட்டார். "அத்துடன், இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை குதிரை வீரர்களை அனுப்பி கடற்கரைப் பகுதியிலிருந்து செய்திகள் இருந்தால் பெற்று வருவதற்கும் ஏற்பாடு செய்யவும்." உத்திரவிட்டார் மன்னர். I சமுகம் உத்தரவு" பிரதானி பதில் சொன்னார். ஒலைகள் வாசிப்பு முடிந்தது.ாஜராஜேஸ்வரி அம்மன் கோவில் மணியோசை சாயங்கால பூஜையை அறிவித்தது. கோவிலுக்குச் செல்ல மன்னர் எழுந்தார். பிரதானியும் அலுவலர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். 魯魯魯