பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 எஸ். எம். கமிால் மாடத்தின் இன்னொரு பகுதியில் இரண்டு பணிப் பெண்கள், சற்று முன்னர் அரண்மனை நந்தவனத்தில் இருந்து பறித்து வந்த மல்லிகை,ரோஜா, மரிக்கொழுந்து, சம்பங்கி மலர்களை கொண்டு அரசியாருக்காக பூச்சரம் தொடுத்துக் கொண்டு இருந்தனர். - அப்பொழுது அங்கே வந்த தானாதிவதி, "மகாராணி கலாதேவி வந்துவிட்டார்!" என்ற செய்தியைச் சொன்னார். "எங்கே" ஆர்வத்துடன் கேட்டார். "இதோ வந்து கொண்டே இருக்கிறேன். மகாராணி " என்று சொல்லியவாறு கலாதேவி வந்தா. இருக்கையைவிட்டு எழு த ராணியார், அவனை மகிழ்ச்சியுடன் பிணைத்து இறுக அனைத்துப் பிடித்தாவாறு, T. நீ இல்லாத இந்தப் பத்து நாட்களும் எனக்கு பத்துயுகம் போல இருந்தது. பயணம் செளகரியமாக இருந்ததா? சுவாமிதரிசனம் எப்படி? " மனங்குளிர பெருமாளைச் சேவித்தேன். காலையில் இருந்து மாலை வரை அவரது சன்னதியில் அமர்ந்து பாகவத நாமாவளி பாசுரங்களை பாடி எனது ஜென்மதினத்தை பயனுள்ள நாளாகக் கழித்தேன். இதோ கூடல் அழகர் பெருமாளின் பிரசாதம்" கலாதேவி ராணியாருக்கு பவ்யமுடன் பிரசாதத்தை வழங்கி தலையில் துளசி இதழ்களையும் சொறிந்தார். - பின்னர் இருவரும் இருக்கையில் அமர்ந்து உரையாடத் தொடங்கினார்.