பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 163 "மகாராஜா எங்கே" கலாதேவி கேட்டாள். "திருப்புல்லாணி கோயில் திருப்பணிகளை பார்வையிட சென்றுள்ளார்கள். நாளை திரும்புவார்கள்." மகாராணியாரது பதில் " ஆமாம் மதுரையில் எங்கு தங்கினாய். வேறு யாரையும் சந்தித்தாயா?" " இல்லையம்மா முதல் நாள் இரவு கோயில் மடத்தில் தங்கினேன்" அடுத்த நாள் காலை பகல் முழுவதும் திருக்கோவிலில் கழிந்தது. மாலையில் அங்கிருந்து புறப்பட்டு விட்டேன். எனக்கு வேண்டியவர் என மதுரையில் பெருமாளைத் தவிர வேறு யாருமே - - | இல்லையம்மா. அதுவரை தொடுத்து வந்த பூச்சரங்களை பணிப்பெண்கள் ராணியாரிடம் கொடுத்தனர். அவைகளில் ஒன்றினை கலாதேவியின் தலையிலும், மற்றொன்றை தனது கூந்தலிலும் சூடிக் கொண்ட ராணியார் பணிப் பெண்கள் அங்கிருந்து அகன்று விடுமாறு சைகை செய்தார். அவர்கள் கீழ்த் தளத்திற்குச் சென்றனர். " ஆமாம் எட்டு ஆண்டுகள் மதுரை வாழ்க்கையில் உனது அன்பிற்குறியவர்கள் என்று யாரையுமே தேர்வு செய்து - s - „MT கொள்ளவில்லையா? " மகாராணி அந்த வாழ்க்கையை நினைத்தால் எனது மனத்தில் ஒரு பெரும் பாறாங்கல்லை வைத்து அழுத்துவதுபோன்ற சஞ்சலம் தான் ஏற்படும். நாட்டியப் பயிற்சி, நாட்டிய நிகழ்ச்சி, பாராட்டு பரிசில், விருந்து, ஒய்வு இப்படியே அங்கு நாட்கள்