பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 எஸ். எம். கமால் கழிந்தன. பிறரது பார்வையில் எனது வாழ்க்கை பகட்டும் பெருமிதமும் நிறைந்ததாக பொறாமை கொள்ளக் கக்ககாக தோன்றியது. ஆனால்.... "சொல் தேவி " " இல்லை மகாராணி பெருமாளைத் சேவித்து பெற்றுள்ள அமைதியுடன் இப்பொழுது வந்துள்ளேன். அந்த அமைதியில் கூட ஒரு நெருடல். அதனை இன்னொரு நாள் சொல்கிறேன்." "நாம் இருவர்தானே இருக்கிறோம். மதுரையில் உனது மன அமைதிக்கு நெருடலா. அந்த விவரத்தையாவது சொல்லேன்" " மகாராணி ...." | உனது தயக்கத்தைப் பார்த்தால் ஏதோ முக்கியமான நிகழ்ச்சி போல் அல்லவா தோன்றுகிறது. உனது முகத்திலும் ஒரு புதுப் பொலிவு ஏற்படுகிறது" சிரித்துக் கொண்டே சொல்லத் தொடங்கினான், கலாதேவி. "ஒன்றுமில்லையம்மா " மறுபடியும் தயக்கம் "என்ன ஒன்றுமில்லை அந்த ஒன்று உனது இதயத்தில் உண்டு என்பதால் தானே சொல்லச் சொல்கிறேன்." ' மகாராணி அன்று கூடல் அழகர் சன்னதியில் பூஜையில் கலந்து பொண்ட பிறகு நானும் எனது பணிப்பெண்களும் அங்கு அர்த்த மண்டபத்தில் அமர்ந்து பாகவத பாராயணம்