பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் | 65 செய்தோம். பாசுரங்களை பாடிக் கொண்டு இருந்தோம். அப்பொழுது அங்கு வந்த துறவியொருவர் எங்களுடன் இணைந்து பாசுரங்களைப் பாடினார். இவ்விதம் சொல்வதைவிட ஆழ்வார்களது பக்திச் செறிவு நிறைந்த அந்தப் பாசுரங்களை தேன்மாரியாக சொரிந்தாள் எனச் சொல்ல வேண்டும்." 11 அப்புறம்" நாங்கள் புறப்படும் பொழுது அவரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன். அந்தப் புனித நாளில் என்னை ஆசீர்வதிக்கும்படியும் சொன்னேன். அவர் மறுத்துவிட்டார்" ஏன்?" ராணியாரது வினா. சேதுபதி சிமையைச் சேர்ந்தவரான அவர் ஒரு வழிப்போக்கர் என்றும், என்னை ஆசீர்வதிக்கும் அளவிற்கு அவர் வயது நிரம்பப் பெற்றவரோ அல்ல சொன்ன இன்னொரு தகவல் என்னை மிகவும் கவர்ந்தது." "அது என்ன?" " அதாவது மாதந்தோறும் அவரது ஜென்ம நட்சத்திரமான ரோகிணி நாள் அன்று, அவரது பயணத்தில் எதிர்ப்படும் எந்தக் கோவிலாவது பூஜையில் கலந்து கொண்டும் பக்திப் பாடல்களை பாடுவதிலும் பொழுதைக் கழித்து வருவதாகச் சொன்னார். அவர் மாத ஜென்ம நட்சத்திர நாளையும், நான் எனது வருஷ ஜென்ம தினத்தையும் கொண்டாடி வருவதும் எனது உள்ளத்தில் அவர் மீதும் ஏதோ ஒருவிதமான.." கலாதேவி பேச்சை முடிப்பதற்குள் சரி போதும் .... ஆக பெருமாள் சன்னதியில் காதல் தொடங்கிவிட்டது அப்படித்தானே." மகாராணியார் சொன்னார்.