பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 எஸ். எம். கமால் II இல்லை மகாராணி, நீங்கள் அதற்குள். அவர் எனது நாட்டியத்தை இராமேசுவரம் கோவிலில் கண்டு களித்ததாகவும் சொன்னார். அவ்வளவுதான் அவரிடம் விடை பெற்று பயணம் புறப்பட்டேன்." "நாளை மகாராஜா அரண்மனை திரும்பியதும் அந்த துறவியை தேடிப்பிடித்து வரச் சொல்வோம். ஆடலும், பாடலும் இக்யமாக ஏற்பாடு செய்வோம்." இருவரும் சேர்த்து சிரித்தனர். அவர்களது சிரிப்பை தெரிந்து கொள்வது போல் கிழக்குவானில் வெண்ணிலா எழுந்து கொ ண்டிருந்தது. 革 事 * 米 * கிழக்கு கடற்கரையில் பாம்பனுக்கு மேற்கே வேதாளை இட்டிய கடற்கரையில் மக்கள் நடமாட்டமற்று இடத்தில் ஒரு மண்டபம் இருந்தது. சுமார் நாற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சேதுயாத்தீர்கர்களது தங்கும் இடமாகப் பயன்பட்டதை போர்ச்சுகீசியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு அங்கே ஒரு படை அணியையும் நிலையாக நிறுத்தி வசூலித்து வந்தனர். இவ்வித வரியொன்றை சிரமத்துக்கள்ளான மக்கள் அப்பொழுது இருந்த சேதுபதி மன்னரிடம் முறையிட அவர் மதுரை நாயக்க தளபதியாக இருந்த விசுவநாத நாயக்கரது படைபலம் பெற்று போர்ச்சுகீசியரை இடோட விரட்டியடித்தார். அவர்கள் கடல் மூலம் தப்பித்து இடுகையில் அவர்களுக்காக சமரசம் பேச வந்த பாதிரியார் ஒருவரும் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பதும் வரலாறு. அதன் பிறகு அந்த மண்டபம் மக்களால் விரும்பி பயன்படுத்தப் படவில்லை. அதிலே இருவர் அமர்ந்து எதிரே அலைமோதிக் கொண்டிருந்த அந்தக் கடலைப் பார்த்தவர்களாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் நமக்கு ஏற்கனவே