பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 167 அறிமுகம் ஆனவர்கள்தான் ஒருவர் பெரியவர். அடுத்தவர் வீரபாண்டியன் என்ற இளைஞன். வீரபாண்டிய! என்ன இருந்தாலும் சரக்குப் பொதியினைப் பகல் நேரத்தில் கரை இறக்கக் கூடாது. நம்புதாளை தொண்டியை அடுத்து இருப்பதால் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாயிற்றே" " உன்மைதான் மகாராஜா" நல்ல் வேளை கரையில் இறக்கிய இரண்டு மூட்டைகளைத் தவிர எஞ்சிய மூட்டைகளை கரை இறக்காமல் வள்ளத்தை திருப்பி சேதுக்கரைத் தோப்பிற்கு கொண்டு சென்றதால் பெருமளவு நஷ்டம் தவிர்க்கப்பட்டுவிட்டது. இன்று இரவு தனுக்காத்த இராமுத் தேவன் வந்ததும் முழு விபரமும் தெரியும்." "அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து தெளிவான பதிலையும் பெற்று வருவான் என எதிர்பார்க்கிறேன். வரட்டும் பார்க்கலாம். அது சரி அவருக்கும் சேர்த்துதானே கட்டுச் சோறு கொண்டு வந்து இருக்கிறாய்?" பெரியவர் கேட்டார். "ஆமாம் மகாராஜா நாளை மதியத்திற்கு கூட சேர்த்து வாங்கி வந்து இருக்கிறேன்." "ரொம்பவும் நல்லது. நான் கொஞ்சம் உறங்குகிறேன்." "உத்தரவு மகாராஜா" வீராபாண்டியன் சொல்லிவிட்டு எழுந்து அந்த மண்டபத்துக்குள்ளேயே உலாவிக் கொண்டு இருந்தான். அந்தி மாலைப் பொழுது முடிந்தது, அந்த பகுதி முழுவதையும் மெல்லிய இருள் கவிழ்ந்த பிறகு மண்டபத்தை விட்டு வெளியே வந்து நாலா