பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 Geelы:5 часотестопыр ппse пытф2,ёчно கழியின் நுனியில் பூசப்பட்டிருந்த சாயத்தினால் எதிரியின் உடலில் - தோளில் இருந்து இடுப்பு வரையிலான பகுதிகளில் - கழியினால் தொட்டு சாயத்தை பூசிவிட வேண்டும். இந்தப் போட்டியில், முதலில் எதிரியின் கம்பு வீச்சைத் தடுத்து, வெற்றிகரமாக எதிரி உடலில் சாயக்குறியை இடுபவர் வெற்றி-யாளராக அறிவிக்கப்படுவார். முதல் சுற்றில் வெற்றிபெறும் ஆறு வெற்றியாளர்களும், மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டு இவ்விதம் வெற்றி பெற்ற மூவர் மூன்றாவது இறுதிச் சுற்றில், ஒருவர் எப்படியாவது ஏனைய இருவரது உடலில் தமது கழியினால் சாயக்குறியிகை ஏற்படுத்துதல் வேண்டும். அவர் தான் இறுதி வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். ஒவ்வொரு அணியைச் சேர்ந்த-வரும் சிலம்பக்கலையை சிறப்பாகக் கற்றறிந்ததை தங்களது விளையாட்டுக்கள் மூலம் முதலில் விளையாடிக் காண்பித்தனர். அவர்கள் அவ்விதம் விளையாடும் பொழுது அவர்களது கைகளில் கழி இருப்பதாகவே பார்வையாளர்கள் கண்களுக்குப் படவில்லை. சூறாவளி வேகத்தில் சுழலும் அவர்களது கழி, எழுப்பும் விரைவு ஒசையில் இருந்துதான் அவர்கள் கழியைக் கொண்டு விளையாடுவது புரியக் கூடியதாக இருந்தது. அடுத்து, ஒருவரது கழி, மற்றவரது உடலில் படாதவகையில் காத்துக்கொள்வதற்கும், எதிரியின் உடலில் எப்படியாவது சாயக்குறியை இட வேண்டும் என்பதிலும் முனைப்பாக இருந்தனர். இறுதிச் சுற்றில் வந்த போட்டியாளர்களில் இரண்டு போட்டியாளர் மீது சாயக்குறியை ஏற்படுத்தி தமது வெற்றியை நிலைநாட்டியவர், பெருநாழியைச் சேர்ந்த சொக்கன் என்பவர். மக்களது மிகுந்த ஆரவாரத்திற்கிடையில் சொக்கனுக்கு சேதுபதி மன்னர் பொற்பதக்கத்தையும், பொற்சங்கிலியையும் அணிவித்து பெருமைப்படுத்தினார். சொக்கனும் மன்னருக்கும், கூட்டத்தினருக்கும் கும்பிடு போட்டவுடன் நிகழ்ச்சி முடிந்து மக்கள் கலைந்து சென்றனர்.