பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 எஸ். எம். கமால் புறமும் கூர்மையாக காதையும், கண்ணையும் ஒருமைப்படுத்தி நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். சற்று துாரத்திலே கரிய நிறத்தில் உருவம் ஒன்று. வானத்து நட்சத்திரங்களின் மங்கலான ஒளியில் ஏதோ ஒரு கனவில் இருப்பது போல் பிரமை ஏற்பட்டது. உண்மையில் அவன் விழித்தவாறு கனவு கண்டு கொண்டு தான் இருந்தான்.ஆம் அது ஒரு நீண்டகனவு. நாலைந்து வருடங்களாகவே அந்தத் கனவுகளே அவன் வாழ்க்கையாவிட்டது. 米 半,半 半、半 இராமநாதபுரம் சோட்டைக்கு மேற்கே பத்துக் கல் தொலைவில் உள்ள களரி கிராமத்து பெரிய தனக்காரரது மகனான வீரபாண்டியன் இராமநாதபுரம் சேதுபதியாக இருந்த தளவாய் சேதுபதியின் மகளை மணந்த நாரணத் தேவருக்கு பங்காளி முறையினன். தளவாய் சேதுபதிக்கு எதிாக தம்பி கலகம் செய்து மதுரை மன்னர் திருமலை நாயக்கரது பஞ்சாயத்துக்கு சென்றான். மறவர் சீமையின் பாரம்பரியக் கட்டமைப்பை குலைப்பதற்கு அதுதான் தக்க தருணம் எனக் கருதிய மதுரை திருமலைநாயக்கர் இறந்தவுடன், தம்பித் தேவருக்கு காளையார் கோவில் பகுதியையும், நாரணத்தேவரது தமையன் ரெகுநாத திருமலைக்கு இராமநாதபுரம் பகுதியை இன்னொரு பங்காளியான தனுக்காத்த தேவருக்கு திருவாடாப்ை பகுதியையும் பிரித்துக் கொடுத்து மறவர் சீமையை மூன்று பிரிவாக இயங்கச் செய்தார். மன்னர் திருமலை நாயக்கர் ந்ேது ஆண்டுகளுக்கு முன்னர் சேது நாட்டின் மீது படையெடுத்து சாதிக்க முடியாததை, மறவர் சீமையின் ஒருமித்த பேராற்றலை இப்பொழுது இந்த நாட்டுப் பிரிவின் மூலம் எளிதாகச் சாதித்து. விட்டார். பிரிவினை என்றாலே வலிமையை சிதைப்பது என்றுதானே பொருள்!