பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 169 தொன்று தொட்டு மறவர் சீமையின் ஆட்சி படத்திற்கு உரிமை கொண்டாடுபவர்கள் யாரும் செய்திராதது இந்த நாட்டுப் பிரிவினைத்திட்டம். என்றாலும் அன்றைய இறுக்கமான சுழலுக்குற்திவாக சம்பந்தப்பட்டவர்கள் பிரிவினையை ஏற்றுக் கொன்டது ஒருபலவீனமான சுய நலச்செயல். ஆனால் மன்னர் திருமலை நாயக்கரது இந்த பிரிவினையால் அவரது திட்டம் இரண்டாவது முறையாகத் தோல்வி. யடைந்தது. முதலில் கி. பி.1639 -40ல் மதுரை மண்டலத்தில் உள்ள எழுபத்து இரண்டு பாளையக்காரது படைகளைத்திரட்டி சேது நாட்டின் மீது படையெடுத்தார். சேதுபதியை இராமேஸ்வரம் போரில் முறியடித்து அவரை மதுரைச் சிறையில் அடைத்த போதும். மறவர்களது வெறித்தனத்திற்கும் தன்மான உணர்விற்கும் எதிர் நிற்க முடியாமல் சிறையில் இருந்த தளவாய் சேதுபதியை விடுதலை செய்து சேது நாட்டு பொறுப்பில் அமர்த்தினார். மன்னர் தளவாய் சேதுபதி இறந்தபிறகு சேது நாட்டை மூன்று பிரிவாக அமைத்து புதிய ஆட்சியாளர்களை ஏற்படுத்தினார். ஆனால் குறுகிய காலத்திற்குள் தம்பி சேதுபதியும், அடுத்து தனுக்காத்த தேவரும், ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்தபின், இராமநாதபுரம் பகுதி ரகுநாத திருமலை சேதுபதியே எஞ்சிய இரு பகுதிகளையும் இணைத்த பழைய சேதுபதி சீமையாக மாற்றினார். மக்கள் முழுமையாக இந்த இணைப்பை வரவேற்றனர். ரகுநாத திருமலை சேதுபதியின் பங்காளிகளில் இருவர், காளையார்கோவில் பகுதி, திருவாடனைப் பகுதிகளுக்கு தொடர்ந்து அவர்களே மன்னர்களாக ஆகி விடலாம் என ஆசைப்பட்டனர். திருமலை ரகுநாத சேதுபதி அதற்கு இடங்கொடுக்காமல் மக்களை ஒன்றுபட்ட அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முந்திக் கொண்டார்.