பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 எஸ். எம். கமால் இந்த அதிருப்தியாளர்களில் ஒருவரான "மகாராஜா" என்று அழைக்கப்படும் பெரியவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் களரி கிராமத்திற்கு வந்த பொழுது வீரபாண்டியனிடம் நீறுபூத்த நெருப்பாக இருந்தசேதுபதியாகும் ஆசைக்கும் ஆதரவாக நிற்கும்படி வீரபாண்டியனைத் துரண்டிவிட்டார். அவரது துண்டுதலில் இருவரும் நன்றாக சிக்கிக்கொண்டனர். அன்று முதல் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஆகிவிட்டது போன்ற கற்பனையில் வீரபாண்டியன் வாழத்தொடங்கிவிட்டான். கடந்த இரண்டு வருடங்களாக இரவு பகல் என்று எண்ணாமல் நாடு முழுவதும் சுற்றி வந்தான். திருமலை சேதுபதி சுயநலம் காரணமாக இறந்து போன தம்பித் தேவர், தனுக்காத்த தேவர் வாரிசுகளைப் புறக்கணித்து தர்மத்திற்குப் புறம்பாக சீமை முழுவதற்கும் அவரே மன்னராகிவிட்டார் என பிரச்சாரம் செய்தான்.சேதுபதி மன்னருக்கு எதிராக அதிருப்தியாளர்களை ஊக்குவித்து அவர்களை சிறு குழுக்களாக செயல்படுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்து, வந்தான். அதலால் பெரியவரது திட்டம் நிறைவேறி புகலூர் கோட்டையில் சேதுபதி என்ற பெயருடன் பட்டமேறும் நாள் நெருங்கிவருவதாக நம்பி வந்தான். அவர்களது இந்த திட்டத்திற்கு யாழ்பாணத்தில் உள்ள டச்சு கிழக்கிந்திய கம்பெனியாரது ராணுவ உதவிகளைப் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். இது சம்பந்தமான முக்கிய முடிவுடன் டச்சுக்காரர்கள் நிபந்தனைகளைத் தெரிந்து வருவதற்கு சென்று இருந்த தனுக்காத்த இராமுத் தேவனை பெரியவரும், வீரபாண்டியனும் அன்று எதிர்பார்த்து இருந்தனர்.