பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 171 முன்னிரவு கடந்து விட்டது. இன்னும் கிழக்கே நிலவு எழவில்லை. கொண்டல் காற்று வேகமில்லாமல் இதமாக வீசிக்கொண்டிருந்தது. அவைகளின் ஒசை மட்டும் தெளிவாக மீண்டும் மீண்டும் வீசிக் கொண்டிருந்தது. பெரியவர் நன்கு உறங்கிவிட்டு விழித்துக் கொண்டார். "வீரபாண்டியா எங்கே இருக்கிறாய்" "மகாராஜா இதோ வந்து விட்டேன்."வீரபாண்டியன் மெதுவாகச் சொன்னான். அதற்குள்ளாகப் பெரியவரே எழுந்து மண்டபத்தில் திண்ணைக்கு வந்து விட்டார். "அந்தி நேரம் புறப்பட்டிருந்தாலும் இதுவரை வந்து இருக்கலாம். இன்னும் வரக் காணாமே" " வந்து விடுவார் ஐயா!" ஒரு நாழிகை நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர். கடற்கரை அலைகளை அடக்கிவிட்டு ஒரு இசை சற்று பெரியதாக எழுந்தது. அந்த இசை வந்த பகுதியை ஆர்வமுடன் இருவரும் கூர்மையாக உற்று நோக்கினார். கடற்கரையில் வள்ளத்தில் இருந்து இறங்கி மண்டபத்தை நோக்கி வந்தான் ஒருவன். அவன் யார்? தனுக்காத்த ராமுத் தேவரா? அவராகத்தான் இருக்க வேண்டும். о с с