பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 எஸ். எம். கமால் கொண்டார். காரியம் முடிந்தவுடன் உரிய கவனிப்பு செய்வதாகவும் அவருக்கு ஆசைகாட்டி வந்து இருக்கிறேன். " அவர்கள் கம்பெனி கவர்னர் படேவியாவில் இருந்து இப்பொழுது நாகபட்டினம் கோட்டைக்கு வந்து இருக்கிறாராம். இன்னும் இரண்டு வாரங்களில் யாழ்ப்பாணம் வந்தவுடன் அவரது ஒப்புதலைப் பெற்று நமக்கு தகவல் கொடுப்பதாகச் சொன்னார். எப்படியும் நமக்கு அடுத்த ஒருமாதத்தில் போதிய சரக்குகள் கிடைக்கும்." "மிகவும் சந்தோஷம் இனி நமது நடவடிக்கைகளை ஒருமைப்படுத்தி இறுதித் சிட் சுக்க வேண்டும்." பெரியவர் சொன்னார். "ஆமாம் அதில் முக்கிய து இப்பொழுது கமார் இருநூறு பேர்களுக்கு கூடுதல் பயிற் காடுத்து ஆக வேண்டும். இரண்டு மாதங்களில் இதனை முடித்த பிறகு அவர்களை அனுமந்தக்குடி, ஆறுமுகம் கோட்டை, கமுதி, பெருநாழி, இராமநாதபுரம் கோட்டைகள் தாக்குதல் நடத்துவதற்கு பயிற்சியும் அளிக்க வேண்டும்." தனுக்காத்த இராமுத் தேவன் சொல்லி முடிப்பதற்குள் பெரியவர் குறுக்கிட்டுச் சொன்னார். - II இதனை பற்றி விளக்காமாகப் பேச வேண்டும். இப்பொழுது காற்று மாறி அடிக்கிறது. கச்சான் காற்று தொடங்கி விட்டது வள்ளத்தை நகர்த்திச் செல்வோம்." " சரி புறப்படுங்கள் " வீரபாண்டியன் கட்டுசோற்று முட்டையைத் துரக்கி தலையில் வைக்கவும் மூவரும் கடற்கரைக்குச் சென்று வள்ளத்தில் ஏறி அமர்ந்தனர்.