பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 175 வள்ளத்தில் திரை துரக்கி விடப்பட்டு பாய்மரத்தில் கட்டப்பட்டதும் மாலுமிகக்கானைப் பிடித்தார். நீர் கிழிய எய்த அம்பு போல வள்ளம் தெற்கு நோக்கி கடலில் பாய்ந்து சென்றது. கண்ணுக்கு புலப்படாத காற்றின் ஆற்றலை உணர்த்தும் சிறந்த எடுத்துக்காட்டாக அந்த வள்ளத்தின் வேகமும் இயக்கமும் அமைத்து இருந்தது. வள்ளம் இரண்டு நாழிகை நேரத்தில் இருபது கல் தொலைவில் உள்ள மாரியூர் இடுப்பளவு நீரில்அ பெரியவர், வீரபாண்டியன், தனுக்காத்த தேவன் ஆகியோர் நீரில் குதிப்பதற்கு முன்னர் தங்களது உடைகளை கழற்றி பெரிய முண்டாக போல தலையில் பிணைத்துக் கொண்டனர். வீரபாண்டியன் கட்டுச் சோற்றை பத்திரமாக நீரில் நனைந்து விடாமல் தலையில் சுமந்து எடுத்துவந்தான். அப்பொழுது கீழ்வானம் வெளுத்து மங்கலான ஒளி படர்ந்து கொண்டிருந்தது. அந்தக் கடற்கரையில் இருந்து கூப்பிடும் துரத்தில் சிறிய கோவில் ஒன்று இருந்தது. அது ஒரு பழமையான அம்மன் கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதி கடற்கரைப் பட்டினமாக விளங்கியது. பவளவல்லி என்ற அந்த அம்மன் ஆலய இறைவி தெற்கு நோக்கியவாறு நிர்மாணிக்கப்பட்டது. அவர்கள் அங்கே சென்ற பொழுது இளந்துறவி ஒருவர் அமர்ந்து மாணிக்கவாசகரது சிவபுராணத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார். ஏழிசையாய் இசைப் பயனாக விளங்கும் இறைவனுக்கு ஏற்ற வழிபாடு இசைதானே. அந்தக்குரலை அமைதியுடன் கலந்து ஒலித்த காற்று அந்த இனிய குரலின் ஈர்ப்பு மனத்திற்கு தெம்பு ஊட்டுவதாக இருந்தது. அந்தப்பாடலை கோயில் வாசலில் நின்று பெரியவரும், வீரபாண்டியனும் கேட்டுக்கொண்டிருந்த பொழுது தனுக்காத்த