பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 177 "சொக்கநாத நாயக்கர் தலைநகரை திருச்சிராப்பள்ளிக்கு மாற்றிய பிறகு மதுரை அரசியலில் விறுவிறுப்பு எதுவும் இல்லை. என்றாலும் ஒரு முக்கிய செய்தி. செய்தி அல்ல வதந்தி என்று தான் சொல்ல வேண்டும். தஞ்சாவூர் படையெடுப்பிற்கு சொக்க நாதருக்கு உதவியாக சேதுபதி படைகளை அனுப்பாததால், நாயக்கர் மிகவும் கோபமடைந்து இருக்கிறாராம். அதலால் சேது நாட்டின் மீது மற்றுமொரு படையெடுப்பு ஏற்படலாம் என்பது தான் அந்தச் செய்தி." "ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன்னர் திருமலைநாயக்கர் படையெடுத்த பொழுது மதுரை நாயக்கருக்கு ஏற்பட்ட சிரமங்களை சொக்கநாதர் அறிந்து இருப்பார். அத்துடன் தஞ்சை நாயக்கருடன் அவர் கொண்டுள்ள ஆக்கிரமிப்பு நிலையில், சேது நாட்டு படையெடுப்பு நடக்கும் என்று நம்பவில்லை. அப்படியொரு நிலை ஏற்பட்டால் அதனையும் நமக்கு சாதகமானதாக ஆக்கிக் கொள்ளலாம்" பெரியவர் நம்பிக்கையுடன் சொன்னார். "பெரும்பாலும் அவ்விதம் நிகழாது என்று தான் நினைக்கிறேன். அதே நேரத்தில் நமது திட்டத்திற்கு நாயக்க மன்னர் படையெடுப்பால் எவ்வித சிரமும் ஏற்படாது என்று நான் நினைக்கிறேன்" "இன்னொரு செய்தி, இன்று மதுரைக் கோட்டையில் சேதுபதியின் சிங்கமுகமுத்துபல்லாக்கு வந்து இருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். காரணம், கன்னடப்படை வெற்றியின் நினைவாக திருமலை நாயக்கர் திருமலை சேதுபதிக்கு வழங்கிய அந்த பல்லக்கினை சேதுபதியும், அவரது குடும்பத்தினரும் மட்டும்தான் பயன்படுத்துவார்கள். கூடல் அழகர் கோவில் வாசலில் அதனை கண்ட நான் மெதுவாகக் கோவிலுக்குள் சென்று நோட்டமிட்ட பொழுது, சேதுபதியின் நர்த்தகி மட்டும் பெருமாள்