பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 எஸ். எம். கமால் அந்தி நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சேதுபதி மன்னர் நீராவி மாளிகை முகப்பில் இருந்த சவுக்கைக்குச் சென்று ஒய்வாக அமர்ந்து இருந்தார். அப்பொழுது ஏவலர் ஒருவர் வந்து குளுமையான பானம் நிறைந்த கலசத்தை மன்னர் அருகில் இருந்த சிறிய நாற்காலியில் பணிவுடன் வைத்துச் சென்றார். அதனைப் பருகிய பிறகு மன்னர் பிரதானியிடம் கேட்டார். "செய்தி ஏதேனும் உண்டா?" "சமூகத்தை நாடி இருவர் வந்துள்ளனர். மகாராஜா அவர்கள், போட்டிகளை முனைப்புடன் கவனித்துக் கொண்டிருந்ததால் அவர்களை காத்திருக்குமாறு சொல்லியிருக்கிறேன்." "யார் அவர்கள்?" "ஒருவர் மதுரையில் இருந்து வந்துள்ள தூதுவர். இன்னொருவர் கவிராயர் நமது கோட்டை வாசலில் உள்ள ராயசம் அலுவலகத்தில் இருக்கின்றனர்." "இப்பொழுது நேரமாகிவிட்டது. கவிராயரை காலையில் சந்தித்துக் கொள்ளலாம். அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்." "உத்தரவு" பிரதானி சவுக்கைக்கு வெளிப்புறம் சென்று தகவல் கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தார். 'மதுரையில் இருந்து நாயக்கர் மன்னர் என்ன செய்தி அனுப்பி இருப்பார். ஏதும் பாளையக்காரர்கள் பிரச்சனையாக இருக்கலாமோ? நேற்று மதுரையில் இருந்து திரும்பிய நமது ஒற்றர்கள் புதிய தகவல் ஏதும் கொண்டுவரவில்லையே என்று