பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 எஸ். எம். கமால் சேவைக்கு அதில் வந்து இருந்தாள் என்று அறிந்த பொழுது ஏமாற்றமடைந்தேன்." "ஆக இன்னொரு வாய்ப்பு தவறிவிட்டது என்று நினைத்தாய் போலும் "பெரியவர் கேட்டார். "ஆமாம் ஐயா ! இந்த நர்த்தகியும் முன்னால் திருமலைநாயக்கரது ஆஸ்தான நர்த்தகியாக இருந்தவளாம். நாயக்க மன்னரது மறைவுக்குப் பிறகு திருமலை சேதுபதிமன்னர் அவளைத் தமது சமஸ்தான நர்த்தகியாக கியமித்துள்ளார். அவளும் ஆந்திரநாட்டைச் சேர்ந்தவள்தான்..." என்று சென்ன இளந்துறவி தனது பேச்சை தொடராமல் நிறுத்தினார் " வீரசிம்மா. சொல்லவந்ததை சொல்லேன் ." " கூடல் அழகர் கோவிலில் அவளிடம் சிறிது நேரம் பேசினேன். என்னிடம் அவள் அன்பாகப் பேசினாள். அவள் இராமநாதபுரம் கோட்டைக்குள் அரண்மனையில் இருப்பதால் அவளுடன் தொடர்ப்பு கொள்ளலாமா?அவளையும் நமது திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்ா? என்று நினைப்பு ஏற்பட்டது. இயாவின் உத்தரவுப்படி நடந்துக் கொள்கிறேன்." நல்லயோசனை. வாய்ப்புகள் அனைத்தையும் நம்வசமாக்கிக்கொள்வது நமது திட்டத்திற்கு உகந்ததுதான். ஆனால் மிகவும் எச்சரிக்கையாக இல்லையென்றால் பின் விளைவு நமது திட்டத்திற்கு மிகுந்த பாதகத்தை ஏற்படுத்திவிடும். முதலில் நமது நம்பிக்கைக்கு உரியவளா அவள் என்பதை நன்கு சோதித்துக் கொள்." "அப்படியே செய்கிறேன் ஐயா !