பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் 179 " சரி. . . . எல்லோரும் வாருங்கள் பக்கத்து பனந்தோப்புக்கு போய் பதனிர் குடித்துவிட்டு வருவோம்" பெரியவர் சொன்னார். மூன்று பேர்களும் அவரை பின் தொடர்ந்து சென்றனர். சிம்மத்தை தொடர்ந்து செல்லும் குருளைகள் போல. "அதோ பார்த்திர்களா! நாடாவியும் அப்பொழுதுதான் பனை ஏறத்தொடங்குகிறார். நமக்குப் புதிய பதனிர் கிடைக்கும். வயிராற குடிக்கலாம்" என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்னார் பெரியவர். கண்ணுக்கெட்டிய துாரம் வரை நெட்டையான பனைமரங்கள். அந்த காலை நேரத்திற்குரிய பூபாள ராகம் பாடுவது போல சில பனைமரப் பொந்துகளில் குடியிருந்த மைனாக் குருவிகளும் செம்பொத்தும் தங்களது மெல்லிய குரல்களில் தனது இனங்களுக்கு ஒத்துப்பாடுவதுபோல பனைமரங்களில் இருந்து கீழே விழுவதுற்கு ஏற்றார்போல தொங்கிக் கொண்டிருந்த காய்ந்த பனை சிலையும் குரங்கு மட்டையும் காற்றில் உரசும் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. {} {} {}