பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 எஸ். எம். கமால் இந்த அற்புத உண்மை கோவலத்தை முதன்முறையாக அங்கு தரிசித்த பொழுது அவளுக்கு ஏற்பட்ட பெருமிதம் அவளது முகத்தில் பதிந்து பிரகாசித்தது ஆராதனையை முடித்த பட்டர், அந்த தீபத்தட்டை கர்பகிரக வாசலில் குழுமி இருந்த பக்தர்கள் முன் நீட்டிய பொழுது, அனைவரும் அந்தத் தீப ஒளியை இரு கைகளிலும் தொட்டு தங்கள் கன்னங்களில் ஒற்றிக்கொண்டார்கள். அவ்விதமே கலாதேவியும் திட ஒளியை கண்களில் ஒற்றிக்கொண்டு. அந்தத் தட்டில் நாலைந்து வெள்ளிக் காசுகளை தட்சினையாகப் போட்டாள். அடுத்து பட்டர் துளசியும், தீர்த்தமும் சாதித்த பிறகு அனைவரது தலைவயிலும் சடாரி சாய்த்து ஆசிர்வாதம் செய்தார். பெருமாள் சன்னதிக்குத் தெற்கே உள்ள தாயார் சன்னதியையும் சேவித்த கலாதேவி வடக்கே தலவிருட்சமான அஸ்வதத்தை சுற்றி வந்தபிறகு பக்கத்தில் உள்ள ஆண்டாள் சன்னதிக்கும் சென்றாள். அங்கே கோதையின் பாசுரம் ஒன்று பாடப்படுவது கேட்டது. ஆம்: அதே குரல், இதயத்தின் அனைத்து நாளங்களையும் மயக்கி உணர்வு அற்றதாக்கி, செவிப்புலத்தில் அம்ருதத்தை சொரியும் அற்புதநாதம் அதைப்பாடுபவர் கூடல் அழகர் சன்னதியில் சந்தித்த அந்த இளந் துறவி. ஆம் அவரே தான். அந்த அற்புதக் குரலும் அவருடையதுதான். தன்னுடன் அந்த பணிப் பெண்களைத் தாயார் சன்னதியில் இருக்கச் சொல்லிவிட்டு, கலாதேவி ஆண்டாள் சன்னதிக்குச் சென்றாள். தெய்வீகக் காதலில் திளைத்து துவண்டு தேன் குடித்த வண்டாய் சொக்கிப்பாடிய கோதை நாச்சியாரின் பாசுரங்கள் இனிமையும் இறைமையும் சேர்ந்து எழிலான நாதத்தில் இழைந்து குழைந்து ஒலித்தன. இளந்துறவு மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தார். -