பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 183 நம்மை உடையவன். நாராயணன் நம்பி செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி' இது ஆண்டாளின் கனவு மட்டுமல்ல. கடிமணத்திற்காகக் காத்து இருக்கும் அனைத்துக் கன்னியரது கண்களில் படிந்துள்ளது காதல் கனவு அல்லவா? கலாதேவியைக் கண்டவுடன், இந்தப் பாகரத்தை முடித்தார் இளந்துறவி. அவரது முகத்தில்களிப்பு கொப்பளித்தது. ஆனால் இளந்துறவியின் நாத லயம் நின்றது. பிரபஞ்சம் இயக்கமில்லாமல் அசேதனப் பொருளாகிவிட்டதைப் போன்ற பிரமை கலாதேவிக்கு. ஒரு வகையாகச் சூழ்நிலைக்குத் தன்னை சமாளித்தவாறு கலாதேவி கேட்டாள். "இவ்வளவு நேரமும் பெருமாள் சன்னதியில் தங்களுக்காக காத்திருந்தேன். என்னை இங்குவரச் சொல்லிவிட்டு வரத் தவறிவிட்டீர்களே எனப் பயந்தே போய்விட்டேன்." "இதுவரை சொன்ன வார்த்தைப்படி நடந்து வந்து இருக்கிறேன். அதிலும் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, மிகவும் கடுமையான இக்கட்டான சூழ்நிலைகளிலும் எனது வாக்குப் பொய்க்காமல் நடந்து வந்து இருக்கிறேன்." "மிகவும் சந்தோஷம். தங்களைச் சந்திக்கவும் தங்களது தேவாம்ருத இசையினைக் கேட்கவும் கருணை பாலித்த இந்தக் கடல் அடைத்த பெருமாளது கருணையே கருணை . . . . ஆமாம். முக்கியமான செய்தி எனத் தங்கள் ஒலையில் குறிப்பிட்டு இருந்தது. 2"