பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 எஸ். எம். கமால் "ஆம், ஒரு மிகவும் முக்கியமான செய்திதான். அதனை உன்னிடம் எப்படி விளக்கமாகச் சொல்வது. உ.ம். . . . அதை தெரிவிப்பதற்கு முன்னர் உன்னைப் பற்றியும் நான் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா...?" "இரண்டாவது முறையாக சந்துத்து இருக்கிறோம். இப்பொழுதாவது, ஒருவர் மற்றொருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால் ..." கலாதேவியின் பேச்சில் தயக்கம் ஏற்பட்டது. | - - # = == ஆனால் என்ன . . . . தொடர்க்க செல்ல வேண்டியது தானே?"இளந்துறவு கேட்டார். "அதாவது . . . . தங்களது குரலும் அழகிய உருவமும், எனது முந்தையப் பிறவிகளில், எனக்குப் பரிச்சயமானதைப் போன்ற உணர்வைத் தோற்றியுள்ளது. அதனை மேலும் எப்படிச் சொல்வது?..." "அப்படியா செய்தி. மனங்களில் ஒருமை ஏற்பட்டுவிட்டால் அவைகளில் உதிக்கின்ற சிந்தனைகளும் தெளிவாகத்தான் அமையும்" "தெய்வ சன்னிதானத்தில் இருவரும் அறிமுக மாகினோம். ஆதலால் எதையும் மறைத்து வைத்தப் பேச வேண்டியதில்லை, என்றாலும் எனது புறப்பு வளர்ப்பு பற்றி சொல்லித்தானே ஆக வேண்டும்." I. s -- - - ஆமாம். சொல்லுங்கள்" கலாதேவி தனது பூர்வீகத்தைச் சொல்லத் தொடங்கினாள்.