பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 185 "எங்களுக்குப் பூர்வீகம் கன்னட நாடு. எங்களது மூதாதையரில் ஒருவரான கோட்டை மச்சையா என்பவர் ஹொய்சாள மனனரால் ஆந்திரநாட்டு பெறுகொண்டாவிற்கு மனப்பிரதானியாக நியமனம் செய்யப்பட்டார். பெறுகொண்டாவில் அவரது குடும்பம் நிலைகொண்டது. காலச் சூழற்சியில் அவரது வழியினராக நாங்கள் முழுக்க முழுக்க வடுகராகி விட்டோம். தெலுங்கு எங்களது தாய்மொழியாகிவிட்டது. எனது தந்தை பாமினி சுல்தானுடனான சண்டையில் தியாகியாகிவிட்டார். அப்பொழுது நான் இந்து வயதுச் சிறுமி. எனது தந்தையின் வீரத்தை மெச்சி விஜய நகரப் பேரரசர் ராஷ்டிர சன்மானமாக வழங்கிய கொடைக் காணியை நம்பி வாழ்ந்து வந்தது எங்களது குடும்பம், "எனது பாட்டியாரின் முயற்சியால் கர்நாடக இசையையும் பரதநாட்டியத்தையும் பயின்று தேர்ச்சி பெற்றேன். அப்பொழுது பிரபலமாக இருந்த "லேபட்சி இராமாயணம்" என்ற நாட்டிய இசைநிகழ்ச்சியிலும் சிறந்து விளங்கியதால் மாதந்தோறும் திருப்பதி திருக்கோயிலில் நடைபெறும் வசந்த உற்சவம், கருட உற்சவம், பிரம்மோத்தவம், ஆகிய நிகழ்ச்சிகளில் எனது ஆடலும் பாடலும் இடம் பிடித்தன. மக்களிடையே பிரபலமாகினேன். "இந்தப் பேரும் புகழும் எனக்கு பேரபாயத்தையும் ஏற்படுத்தின. இன்னொரு சந்தர்ப்பத்தில் இதனைப் பற்றிச் சொல்லுகிறேன். இதற்கிடையில் எனது தாயார் தனது உடன் பிறந்த சகோதரனுக்கு என்னை திருமணம் செய்து வைத்துப் பார்க்க முயன்றதால், எனது பாட்டி என்னை ஒரு ராஜநர்த்தகியாக்கிப் பார்க்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். அப்பொழுது அங்கு பரவிய விஷக் காய்ச்சல் திடீரென எனது தாயாரையும் பலி கொண்டது. எப்படியோ நானும் எனது பாட்டியும் அந்த நோயின் பிடியில் இருந்து தப்பினோம்.