பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 187 "இப்பொழுது என்னைப் பற்றிச் சொல்லவா?" என்று கேள்வியுடன் அவரைப் பற்றிய செய்திகளைச் சொல்லத் தொடங்கினார் இளந்துறவி. "நானும் இந்தப் புனித சேது பூமியைச் சேர்ந்தவன்தான். இராமநாதபுரம் சேது மன்னருக்கு இந்தச் சீமையை ஆள்வதற்கு எந்த அளவு உரிமையும், நியாயமும் இருக்கின்றனவோ அவை எனக்கும் உள்ளது. அந்தப் பதவிக்கும் மேலான குலப் பெருமையும், குடிப் பெருமையையும் நிலைநாட்ட வீர சபதம் எடுத்து இருக்கிறேன். அதனை நிறைவேற்றும் வரை எனக்கு வேறு சிந்தனை எதுவும் இல்லை. இந்த நாடோடி வாழ்க்கைதான். துறவி நிலைதான். எனது முயற்சியில் என்னைப் போன்ற மன உறுதியும் நாட்டுணர்வும் மிக்க இரு குழுவுடன் தொடர்புகொண்டு, இந்தச் சீமை முழுவதையும் கற்றிச் சுற்றி வருகிறேன். அவ்வளவுதான் என்னைப் பற்றி நான் சொல்லக் கூடியது." என்று தனது பேச்சை முடித்தார். "சரி தங்களது வீர சபதத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்னை அழைத்ததின் நோக்கம்' கலாதேவியின் வினாக்கள். "இதுவரை எந்த சம்பந்தமும் இல்லை. இனி எனது முயற்சிக்கு உதவி செய்பவர்களில் ஒத்தாசை செய்பவர்களில் ஒருவராக உன்னையும் இணைத்துக் கொள்ளலாமா? எனது முயற்சியின் பின்னணியாக உள்ள பெருஞ்சிரமங்களை உனக்கு விளக்கிச் சொல்லலாமா? வேண்டாமா? என்ற வினாக்களை உன்னிடம் கேட்டு விளக்கம் பெறலாம் என்ற நினைப்பில்தான் உன்னை வரவழைத்தேன்." "எனது விடையைக் கொடுப்பதற்கு முன்னர்,என்னைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீகள் என்பதை நான் அறிந்து கொள்வது இயல்புதானே" என்று புன்னகையுடன் கூறினாள் கலாதேவி