பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 7 மன்னர் தமக்குள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது, கையில், திருமுக இலையுடன் ராயசம் வந்து மன்னரை வணங்கி நின்றார். கையில் இருந்த ஒலையை பிரதானியிடம் அளித்தார். அதனைப் பிரித்துப் படித்த பிரதானி மவுனமாக இருந்ததைப் பார்த்த மன்னர், அவரிடமிருந்து ஒலையை வாங்கி தாமே படித்தார். "இதைப் பற்றி யோசித்து நாளை பதில் அனுப்பலாம். துரதுவர் காத்திருக்கட்டும்" ராயசம் சென்ற பிறகு இருக்கையில் இருந்து எழுந்த மன்னர் நீராவி மாளிகைக்குப் புறப்பட்டார். மாளிகை வாசல்வரை சென்று மன்னரை வழியனுப்பிவிட்டு பிரதானி திரும்பினார். அவரும் அவரது அலுவலர்களும் தங்களது அலுவலகங்களுக்குச் சென்றனர்.

  • * *