பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 எஸ். எம். கமால் அவளுடன் சேர்ந்து இளந்துறவியும் வாய்விட்டுச் சிரித்தார். அப்பொழுது அவளது பணிப்பெண் வந்து "ஊர் திரும்புவதற்கு நேரமாகிறது என பல்லக்கு போகிகள் தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்" என்ற விவரத்தைச் சொன்னாள். "சரி நீ பல்லக்கிற்குச் செல்வந்துவிடுகிறேன்" "அந்தி வந்துவிட்டது. வரும் அமாவாசை வரை இராமேசுவரத்தில் இருப்பேன். முடிந்தால் சந்தித்துக் கொள்வோம். அல்லது தொடர்பு கொள்கிறேன். எனது எண்னத்தையும் தெரிவிக்கின்றேன். "வருகிறேன்" என்று சொல்லி இளந்துறவியை கும்பிட்ட கலாதேவியின் கண்கள் நீரைச் சொரிந்தன. அவளை அறியாத ஒரு அழுத்தம் அவளது இதயத்தில் புகுந்துகொண்டது. "சரி" என்று துறவி சொன்னவுடன் கலாதேவி புறப்பட்டாள். தனது கண்களை முந்தானையாள் துடைத்துக்கொண்டு. எதிர்பாராத ஏமாற்றத்தின் செயலா அந்தக் கண்ணிர்! 鬱鬱鬱