பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 எஸ். எம். கமால் தியவாறும் இருந்தனர். ஒருசிலரது கைகளில் ஏடுகளைக் கொண்ட சிறிய கவடிக் கட்டுகளும் இருந்தன. ஒரு நாழிகை நேரம் ஆகி இருக்கும். வடக்கிழக்குப் பகுதியில் இருந்து சேதுபதி மன்னர் பிரதானியும் அமிர்த கவிராயருடன் உரையாடியவாறு வந்து கொண்டு இருந்தனர். அவர்களது நெற்றியில் துலங்கிய திருநீற்றுப் பூச்சு அப்பொழுதுதான் அவர்கள் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அர்ச்சனையில் கலந்துகொண்டு திரும்புகின்றனர் என்பதை அறிவித்தது. சவுக்கை வாயிலுக்கு மன்னர் வந்தபொழுது அங்கு குழுமி நின்றவர்கள் மன்னருக்கு வணக்கம் தெருவித்தனர். பதில் வணக்கம் சொன்ன மன்னர், அவர்களை 'வாருங்கள்" என உள்ளே வருமாறு அழைத்தார். சவுக்கையின் கூடத்தில் இரத்தின. கம்பளங்கள் பரவலாக விரிக்கப்பட்டு இருந்தன. மேற்குப்புறம் மூன்று பஞ்சு மெத்தைகள் (திண்டுகள்) சிறப்பாக இடப்பட்டு இருந்தன. அங்கே மன்னர் அமர்ந்தார். அவருக்கு இடது புறத்தில் கவிராயர் அமர்ந்தார். அவர் அருகே ஏடுகளின் கட்டுகள் ஒரு சிறிய கட்டிலிலே வைக்கப்பட்டு இருந்தன. புலவர்களும், மற்றவர்களும் அவருக்கு சற்று தள்ளி இரத்தின கம்பளங்களில் அமர்ந்தனர். அரண்மனை ஏவலர்கள் வந்திருந்த அனைவருக்கும் சந்தனமும், கற்கண்டும், தாம்பூலமும் வழங்கினர். மன்னர் சைகை செய்தவுடன் கவிராயர் கையில் சில கவடிகளை எடுத்தவாறு எழுந்து நின்றார்.