பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 191 சில நொடிகள் கண்களை மூடி தமது குல தெயவங்களை வந்தனை செய்து முடித்தவுடன் தமது உரையைத் தொடங்கினார். "முத்தமிழின் முழு உருவாக, இங்கு வீற்றிருக்கும் சேது நாட்டு மன்னர் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மகிழ்ச்சியோடு வந்துள்ள புலவர் பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை புலப்படுத்திக் கொண்டு, எனது படைப்பாகிய ஒருதுறைக்கோவையை இங்கே சமர்ப்பிக்கத் தொடங்குகிறேன். "இதுவரை தமிழில் இயற்றப்பட்டுள்ள கோவைகள் பலவற்றை படித்து இன்புற்று இருப்பீர்கள், தெய்வத்தையும், அரசர்களையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு இயற்றப்பட்டவை அவை. பாண்டிக்கோவை, திருச்சிற்றம்பலக் கோவை, தஞ்சைவாணன் கோவை, கப்பல் கோவை, அசதிக் கோவை என்பன அந்த இலக்கியங்கள் அகப் பொருள் பற்றிய நானுாறும் அதற்கும் மேற்பட்ட கட்டளைக் கலித்துறைப் பாக்களைக் கொண்டவை. ஆனால் நான் மகாராஜா அவர்கள் மீது இயற்றி இருப்பது ஒரே துறையில் நானுாறு பாடல்களைக் கொண்டது..." "இது என்ன புதுமையாக உள்ளது. ஒரே துறையில் நானுறு பாடல்களா? வியப்பாக உள்ளது" ஒரு புலவரது மகிழ்ச்சி. "எந்தத் துறையைப் பாடு பொருளாகக் கொண்டுள்ளீர்கள்" இன்னொரு புலவரது கேள்வி. "சற்று பொறுமை காக்கவும். தங்களது இயங்களுக்கு எல்லாம் விளக்கம் தருகிறோம்." என்று கூறிய அமிர்த கவிராயர் தனது உரையை தொடர்ந்தார்.