பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 எஸ். எம். கமால் 'பாட்டு உடைத் தலைவர், தலைவியுடன் கலவி இன்பத்தில் களித்த நிலையில் உள்ளார். தம்மைத் தீண்டி மகிழ்பவர், தமது கற்புத் தெய்வமாகிய தலைவனாக இருந்தாலும், நற்குலப் பெண்டிற்குரிய நாணம், தலைவியைப் பற்றிக் கொள்கிறது. நெகிழ்ந்த ஆடையும், கவிழ்ந்த தலையுமாக அமர்ந்த தலைவி, தலைவனைப் பார்ப்பதற்கு நாணமுற்றவளாகத் தனது காந்தள் மலர் போன்ற கண்களையும், இரு கரங்களால் மூடிக் கொள்கிறாள். இந்த "நாணிக் கண் புதைத்தல்" என்ற துறையில் நானுாறு பாக்களை அமைத்து இருக்கிறேன். "அற்புதம் இதுவரை யாரும் சிந்திக்காத துறை என்றாலும் நானுாறு பாடல்களை இதே துறையில் பாடமுடியுமா? தங்களது முன்னோடி இலக்கியத்தை எடுத்துரைக்கவும்" எல்லையற்ற மகிழ்ச்சியுடன் மற்றொரு புலவர். "புதிய புதிய துறைகளை, இலக்கியங்களைப் படைப்பதற்கு நிலைப்புலனாக அமைந்து விளங்குவதுதானே நமது தமிழ் மொழி! சரி எனது படைப்பிற்கு வருகிறேன். எனது பாடல்களில் முதலிரண்டு அடிகளில் மன்னரது புகழ்ச்சி பேசப்படுகிறது. அடுத்து இரண்டு அடிகளில் தலைவியின் செயலைக் கடிந்துரைக்கும் பொருளாக தேற்றேகாரத்துடன் முடிவதாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பின்னிரு அடிகளிலும் பொதுப் பொருளும் சிலேடைப் பொருளும் பொருந்த அமைக்கப்பட்டுள்ளது. இதோ எடுத்துக் காட்டாக ஒரு பாட்டு..." இவ்விதமாகத் தமது பாடல்கள் ஒவ்வொன்றையும் படித்துக்காட்டி அதில் பொதிந்துள்ள சிறப்புப் பொருள்களையும் சொல்லிக் கொண்டே வந்தார். மன்னரும் மற்றவர்களும் மலைத்தேனென மாந்தி மகிழ்ந்த மனநிலையில் கவிராயரது கவிதைகளையும் விளக்கங்களையும் காதும் கருத்தும் குளிர ரசித்தனர். மிகவும் சிறப்பான கவிதைகளைக் கேட்கும் பொழுது