பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 193 மன்னர் தமது மகிழ்ச்சியின் அறிகுறியாக தங்கத்தாலான சிறு தேங்காய் ஒன்றை புலவர் பக்கம் உருட்டி விடுவார். இவ்விதம் கவிராயரது கவிதைகள் படிக்கப்பட்டு விளக்கப்பட்டன. பொன் தேங்காய்களும் புலவர் பக்கம் குவிந்தன. ஒரு பாடலை பாடி விளக்க உரை செய்தார். "கடை முன்னர் நின்று முடிமேல தமது இருகை குவித்துப் படைமன்னர் போற்றும் ரகுநாத சேதுபதி வளவாய் இடைதான் குறைந்தது மச்சமும் காட்டுவது இல்லையென்றால் மடவீர் எமது தனத்தை எவ் வாறு மதிப்பது வே! இந்த அரண்மனையின் ஆசார வாசலில் முன் நின்று வேந்தர் அனைவரும் தங்களது முடிமேல் இரு கை குவித்து வணங்கும் சேதுபதி மன்னரது பணியிடத்து இருக்கின்றதோ அல்லது இல்லையோ என்று எண்ணத்தக்க உமது இடைதான் காணப்படுகிறது. அதற்குரிய மச்சத்தையும் காண்பிக்காவிட்டால் உமது தனத்தை (செல்வத்தை) எவ்விதம் மதிப்பிடுவது என்பது பொருள். இங்கு இன்னொரு பொருளையும் பார்க்க வேண்டும். தென்றல் காற்றுக்கும் ஆற்றாது நுகங்கும் இடை என்பதற்குப் பதில் எடை என்று, அதாவது நிறை எனக் கொள்ளுதல் வேண்டும். மச்சம் என்பதற்கு கண்களாகிய மீன்கள் என்றும், தலைவியின் செல்வம் என்பதற்குப் பதிலாக தனத்திற்கு (கொங்கைகள்) என அகப்பொருள் கொண்டால் இனிமையாக இருக்குமல்லவா?"