பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 எஸ். எம். கமால் "ஆகா! பிரமாதம்" புலவர்களது மகிழ்ச்சி கோடை கால குளிர்நீரூற்றாய் கொப்பளித்தது. ஆராவாரம் மிகுந்தது. மன்னரது இதழோரத்தில் ஒரு இனிய குறுநகை ஒரு பொற்தேங்காயை மன்னர் புலவர் பக்கம் உருட்டிவிட்டார். இதுவரை வழக்கமாக உருட்டிய தேங்காய் போன்றது தான் இப்பொழுதும் மன்னர் உருட்டிவிடுகிறார் என நினைத்த புலவர், "இந்தப் பாடலின் பொருளை உடைத்துப் பகுத்துப் -- - ... If s - -- பார்க்க வேண்டும்" என மன்னரை வேண்டினார். "இந்தப் பாடலின் பொருளை நன்கு புரிந்துதான் நன்கு முற்றிய தேங்காயாக வழங்கி உள்ளேன். புலவரும் அதனை

  • * - -- + _ III -- -- s - உடைத்துப் பார்க்க வேண்டும்." என்றார் மன்னர்,

கவிராயர் அவ்வாறே அந்தத் தேங்காயை உடைத்துப் பார்த்தார். என்ன ஆச்சரியம் தேங்காய் முழுவதும் மணிகளும் முத்துக்களும் நிறைந்து இருந்தன. கவிராயரும் பிற புலவர்களும் வியப்பினால் மெய்சிலிர்த்து இருந்த பொழுது, மன்னர் சொன்னார். "புலவர்களே, நீங்கள் கவிராயரது கவிதையைச் செவிக்குணவாகக் - கொண்டிருந்தீர்கள். இப்பொழுது வயிற்றுக்கும் விருந்து இருக்கிறது. அனைவரும் எழுந்து விருந்து மண்டபத்திற்கு வாருங்கள்." என்று சொல்லியவாறு சேதுபதி மன்னர் எழுந்தார். மன்னரைத் தொடர்ந்து கவிராயரும் புலவர்களும் விருந்து மண்டபம் சென்றனர். ¥ Ж. Ж. Ж. Ж. | தொடர்ந்து பத்து நாட்கள் அமிர்த கவிராயரது ஒரு துறைக்கோவை அரங்கேற்றம் சேதுபதி மன்னர் முன் நடைபெற்றது.