பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 195 மன்னர் மிகுந்த ஆர்வத்துடன் கவிராயரது பாடலையும் விளக்கத்தையும் கேட்டு மகிழ்ந்தார். புலவர்களும் தமிழ் இலக்கியத் துறைக்குப் புதிய வரவான இந்த ஒருதுறைக் கோவையையும் அதனை மிகச் சிறப்பாக இயற்றிய கவிராயரையும் பலவாறு புகழ்ந்து பாராட்டினர். அரங்கேற்றம் நிறைவு பெற்றதன் நினைவாக மன்னர் கவிராயருக்கும் பல சிறப்புகளைச் செய்தார். பட்டாடைகளும் துணி மணிகளும் அளித்ததுடன், புலவர் பிறந்து வாழ்ந்து வருகின்ற பொன்னன்கால் என்ற சிற்றுாரையும் அதனைச்சார்ந்துள்ள நஞ்சை, புஞ்சை, தோப்பு, துரவு, குளம், குட்டம், கேணி, கிணறு, திட்டு, திடல் ஆகிய அனைத்தையும் புலவருக்கு சர்வமான்யமாகப் பட்டயமிட்டு வழங்கினார். சேது சமஸ்த்தானம் செந்தமிழ் போற்றும் ஆதினமாக விளங்கத் தொடங்கியது. கவிராயர் சொந்த ஊர் புறப்பட்ட நாளன்றும் சேதுபதி மன்னரும் புலவர்களும் குழுமிநின்று மகிழ்ச்சி -யுடனும் மரியாதையுடனும், கவிராயரைப் பல்லக்கில் அவரது ஊருக்கு அனுப்பி வைத்தனர். மன்னர் வழங்கிய பரிசில்களைச் சுமந்த பொதி வண்டிகளும் அதனைப் பின்தொடர்ந்து சென்றன. சங்க காலத்தில் வள்ளலது கொடைப் பொருள்களை சிற்றெறும்புக் கூட்டம் போல சுமந்து வந்த பாணரது பணியாட்களை அந்தக் காட்சி நினைவூட்டியது. பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழியைப் போற்றிப் புரப்பதற்கு தமிழகத்தின் பழம்பெரும் குடியினரான சேதுபதிகள் தங்களது ஆன்மிகத் தொண்டிற்கு அடுத்ததாக தமிழ்த் தொண்டிலும் மிகுந்துவிட்டதை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்தியது. மன்னரது அறைக்கு மகாராணியார் வந்தார். அவரைத்