பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 எஸ். எம். கமால் தொடர்ந்து ஒரு பணிப்பெண்ணும் பலகாரங்கள் கொண்ட வெள்ளி தட்டையும் வெள்ளிச் செம்பையும் கொண்டு வந்து அங்கிருந்து சிறு கட்டிலின் மீது வைத்துவிட்டுச் சென்றாள். "ஒருவாரமாக நீங்கள் சரியாக சாப்பிடவே இல்லை. அதனால் இன்று உங்களுக்காக இந்த நெய்முறுக்கும் பணியாரமும் செய்யப்பட்டுள்ளது. சாப்பிடுங்கள்" "இப்பொழுதுதான், கவிராயர் ஊருக்குப் புறப்பப்பட்டுச் சென்றார். பத்து நாட்களாக அவர் சொல்லிய இனிய பாடல்களும் விளக்கங்களும் எனது செவியிலே நிறைந்து கருத்திலே கலந்து நவரசங்களையும் சொரிந்து நிற்கின்றன. செவிக்கு உணவு இல்லாத போதுதானே வயிற்றை நிரப்ப வேண்டும்." மன்னர் சொன்னார். "நீங்கள் சொல்லும் குறள் எனக்கும் தெரியும். செவியுணவை சிறப்பித்துக் கூறவே வள்ளுவர் அந்தக் குறளைச் சொல்லியிருக்கின்றார்.அதிருக்கட்டும் இதனைச் சாப்பிடுங்கள்" என்று சொல்லியவாறு தட்டினை மன்னரிடம் கொடுத்தார் ராணி. அதில் இருந்த முறுக்கு ஒன்றினை எடுத்து வாயில் போட்டு சில நொடிகளில் மென்று விழுங்கினார் மன்னர். "என்ன சேது முறுக்கு இனிக்கிறது. தவறுதலாகப் பணியாரம் மாவில் செய்யப்பட்டுவிட்டதா" மன்னர் கேட்டார். "இல்லை. தாங்கள் பத்து நாட்களாக அமிர்த கவிராயரது கவிகளை, அதிலும் மன்னரை மிகவும் போற்றி புகழ்ந்து கூறியுள்ள புகழ்ச்சிகளினால், மகாராஜா அவர்களது காதுகள் மட்டுமல்ல நாக்கும் அந்தக் கவிதைகளை திரும்பத் திரும்பப் படித்து தங்களது நெஞ்சமெல்லாம் அவை நிறைந்து இருப்பதால்தான்