பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் 197 தங்களுக்கு முறுக்கும் இனிக்கிறது. ஏது மதிய உணவில் புளிரசம் கூட இனித்தால் வியப்பில்லை." இருவரும் சேர்ந்து சிரித்தனர். பின்னர் மன்னர் கேட்டார், "கவிராயரது நானுாறு பாடல்களிலும், சரி சமமாக மன்னருடன் இந்தத் தலைவியைத்தானே மிகவும் புகழ்ந்து, இன்னும் சொல்லப் போனால், கற்பனை நயங்களுடன் வெள்ளிடையாகவும், சிலேடையாகவும் வியந்து இருக்கிறார். அவைகளைக் கேட்டு ருசித்த செவியுடன் சிந்தையும் அல்லவா சேர்ந்து இனிக்க வேண்டும். இது உங்களது சொற்களில் தொனிக்கவில்லையே" புன்னகையுடன் மன்னர் கேட்டார். "சற்று முன்னர் சொன்ன குறளை மாற்றிப் படியுங்கள்." "வயிற்றுக் குணவு இல்லாத பொழுது சற்று செவிக்கும் ஈயப்படும். வயிறு நிறையாத வேளையில்தான் செவிக்கும் சிந்தைக்கும் கவிதை இன்பம் வழங்கும் சரி தானே" என்று ராணியார் சொல்ல இருவரும் மீண்டும் சிரித்னர். § {} {}