பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் 199 மற்றும் மறவர் சீமையின் தெற்குப் பகுதி நாடாள்வார்கள் சிலரும், கடற்கரையில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றனர். உயர்ந்து பரந்து கினைப்பரப்பி நின்ற ஒரு ஆலமரத்தின் நிழலில் அமர்ந்தனர். "வீரபாண்டியா! நீ சென்று சாப்பாட்டிற்கான ஏற்பாடு களைச் செய்துவிட்டு வா" பெரியவரது ஆணை. கூப்பிடு தூரத்தில் அந்த ஆலமரத்திற்கு சற்று தொலைவில் இன்னொரு கட்டுமரத்தின் நிழலில் படகைச் செலுத்தி வந்தவர்களை வைத்து சமையல் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வீரபாண்டியன் வந்தான். "சரி இப்பொழுது கூட்டத்தை தொடங்கலாம்" பெரியவர் சொன்னார். "வீரசிம்மா! நீ அழைத்து வந்துள்ள நாட்டுத் தலைவர்கள் யார் யார் என்று எங்களுக்கு அறிமுகம் செய்துவை." என்று சொன்னவுடன் வீரசிம்மன் எழுந்து நின்று, "இதோ அவர் கருநீலக்குடி நாட்டு காத்தவராயத் தேவர். இவர் பருத்திக்குடி நாட்டு வணங்கா முடித் தலைவர். இவர் வேம்பா நாட்டு சீவண்ணத் தேவர். இவர் கிடாத்திருக்கை நாட்டு கூலங்காலிப்புலித் தேவர். இவர் அளற்று நாட்டு அமரடக்கி தேவர். அதோ அவர் வடதலைச் செம்பி நாட்டு பொன் வண்ணத் தேவர். . ..." என்று அங்கிருந்த ஒவ்வொருவரையும் சுட்டி காட்டி அறிமுகம் செய்துவிட்டு அமர்ந்தார். பெரியவர் பேசத் தொடங்கினார். "நாட்டுத் தலைசிகளே! உங்கள் அனைவரையும் இரு மகத்தான பணி ஒன்றில் ஈடுபடுத்தவேண்டும் என்பதற்காகத் தான். இங்கு அழைத்து வருமாறு செய்தேன். நான் சொல்லயிருப்பது