பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 எஸ். எம். கமால் மிகவும் இரகசியமானது. அதனால்தான் அதைச் சொல்வதற்கு நம்மைத் தவிர வேறு யாருமே இல்லாத இந்த தீவில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு." "நாம் அனைவரும் சில கிளைகளாக அமைந்து இருந்தாலும் நாம் அனைவரும் வரலாற்றுப் புகழ் மிக்க மறவர் என்ற தொகுப்பைச் சார்ந்தவர்கள். நமது முன்னோர்களின் வீர உணர்வும், வீர சாகசங்களும், சோழப் பேரரசும், அமைவதற்எலகு அடித்தளமாக இருந்தன. அவையெல்லாம் பழைய கதை. தற்பொழுதைய நிலைக்கு வருவோம். நமது மறக்குடி மக்களுக்கென தனியாக ஒரு அரசு இந்தப் பகுதியில் பல காலமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் மறவர் சீமையின் அரசுக்கு எத்தகைய இடைஞ்சலும் இருந்தது இல்லை. ஆனால் கடந்த நூறு வருடத்திற்கு மேலாக மதுரையைப் பிடித்த வடுகர்கள், நமது மறவர் சீமைக்கு மிகப் பெரிய எதிரிகளாக இருந்து வருவதுடன், இதனை அழித்து Nப்பதற்கும் தொடர்ந்து திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர். "முதன் முதலில் பாண்டிய gmنامهت பலவிதமான தந்திரங்களைக் கொண்டு கைப்பற்றிய விசுவநாத நாயக்கன், அப்பொழுது விரையாதகண்டனில் இருந்த நமது மூத்த குடியினரான ஜெயந்துங்கத் தேவனை சூழ்ச்சியால் கொலை செய்து, மறவர் சீமையில் குழப்பத்தை ஏற்படுத்தினர். சிலகாலம் மன்னர் இல்லாது தத்தளித்தது மறவர்சீமை, அடுத்து சேது பட்டத்திற்கு வர வேண்டிய இளைஞன் சடையக்கனை, தந்திரமாக நாடுகடத்தி இலங்கையில் உள்ள வன்னிக் காட்டில் அனாதையாகத் திரியும்படி செய்தனர். அவனஸதது வழியாளர் அங்கிருந்து தப்பி வந்த சடைக்கன் புகலூரில் மறவர்களது பாரம்பரிய அரசை நிலைநாட்டினார். பகையை மறந்து மதுரை மன்னரான முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கருடன் நேச உறவோடு வாழ்ந்து வந்தார்.