பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 201 "ஆனால் மீண்டும் மறவர் அரசையும், குடிகளையும் அழிக்க முயன்றனர் வடுகர். நமது முன்னோர்களது வழியில் மறவர்களை அழித்து அவர்களது மறவர் சீமையை தங்களது பாளையப் பட்டுக்களில் ஒன்றாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று பேராசைப்பட்டனர். மறவர் சீமை மீது மிகப் பெரிய படையெடுப்பை மேற்கொண்டான் மதுரை திருமலை நாயக்கன். அவனுக்கு அடிமைப்பட்டிருந்த 72 பாளையக்காரர்களைக் கொண்டும் போர்ச்சுக்கிசிய பரங்கிகளின் ஆயுத உதவி கொண்டும் ஆயிரக்கணக்கான மறவர்களை அழித்தான். இன்றும் கிழக்குச் சிமையில் பாழ்பட்டுக் காட்சியளிக்கும் புகலூர் அரியாண்டிபுரம், அத்தியூத்து கோட்டைகளின் இடிபாடுகள் அழிந்துபட்ட நமது முன்னோர்களின் தன்மான உணர்வுக்கும் ஆயிரக்கணக்கான தாய்மார்களின் கழுத்தில் இருந்து அறுத்து எறியப்பட்ட ஐம்படைத்தாலிகளின் நினைவுக் களமாக இருந்து வருகின்றன. இராமேசுவரம் தீவுச் சண்டையில், அப்பொழுது இருந்த மன்னர் தளவாய் சேதுபதியை வென்று அவரை மதுரைச் சிறையில் அடைத்தான். மறவர் சிமையில் தலைமகனான சேதுபதி சிறைபிடிக்கப்பட்டார் என்ற செய்தி பரவியவுடன் மக்கள் அனைவரும் சண்டமாருதம் என சிறி எழுந்தனர் மதுரையை அழிக்க வேறு வழியில்லாமல் திருமலை நாயக்கர் தளவாய் சேதுபதியை விடுவித்து புகலூருக்கு அனுப்பி வைத்தான். "படைபலம் மூலம் சாதிக்க முடியாத தமது திட்டத்தை மறவர்களது பேரரசை அழித்து, மறவர் சீமையை எழுபத்து முன்றாவது பாளையமாக்க வேண்டும் என்ற பழைய திட்டத்தை அமைதியான வழியில் நிலைநாட்ட மீண்டும் முயன்றான். அதற்கான வாய்ப்பும் பிறகு எழுந்தது. தளவாய் சடைக்கன் சேதுபதி இறந்த பொழுது, அவரது வைப்பு மகன் பொத்தண்ணா குழப்பத்தை ஏற்படுத்திய பொழுது, சேதுபதி சீமையினை அம்பலக்காரராக மாறி, சேதுபதி சீமையை மூன்று கூறுகளாக்கி மறவர் சீமையின் வலிமையைக் குறைக்க முயன்றான். இந்தத்