பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 எஸ். எம். கமால் திட்டமும் சில மாதங்களே செயல்பட்டது. மீண்டும் மறவர் சீமை ஒன்று சேர்ந்தது. இப்பொழுது மூன்றாவது முறையாக சேதுபதி மன்னரை மட்டுமல்லாமல், சேதுபதி சீமை மறவர்களையும் அழிக்கத் திட்டமிட்டு கன்னடப் படையெடுப்பிற்கு காவுகொடுக்க மதுரை நாயக்கன் துணிந்தான். நாயக்க மன்னனது சூழ்ச்சியை உணராத தற்பொழுதைய சேதுபதி, நாயக்க மன்னரது உயிர்த் தோழரைப் போல தம்மை நினைத்துக் கொண்டு மதுரை மீதான கன்னடப் படையெடுப்பினை முறியடித்து இந்தப் புனித தமிழ் மண்ணில் வடுகரது ஆட்சி நிலைபெறுவதற்கு உதவி செய்துவிட்டார்...." பெரியவர் பேச்சை தொடர முடியாமல், கருநீலக்குடி நாடாள்வாரும், கிடாத்திருக்கை நாட்டு நாடாள்வாரும் கேளள்விகளை எழுப்பினார்கள். "மதுரை நாயக்க மன்னர்கள் சேது நாட்டிற்குச் செய்துள்ள இத்தனை தீங்கினையும் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் அறிந்து இருப்பார்தானே?" "மதுரை நாயக்கருக்கு சேதுபதி மன்னர் உதவுவதற்கு வேறு சிறப்பான காரணம் எதுவும் இருக்கிறதா?" பெரியவர் சில வினாடிகள் அமைதியாக இருந்தார். மீண்டும் அவரது முகத்தில் வெறுப்பும் வெஞ்சினமும் இழையோடின. "இப்பொழுது நான் சொல்லியவை அனைத்தும் சமீபகால வரலாறுதான். இதனை அனைவரும் அறிந்து இருப்பர். அல்லது நமது முதியவர்கள் சொல்லக் கேட்டிருப்பர். ஆதலால் சேதுபதி மன்னர் அறியாது இருக்க ஏதுவில்லை.... அப்புறம் ஏன் இந்த அவலம் என நீங்கள் கேட்பது நியாயமானது. என்ன செய்வது? சேதுபதி மன்னருக்கு முதலில் இனஉணர்வு இல்லை. அடுத்து