பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் 203 நெருக்கடியான நிலையில் தன்வலியும், வினைவலியும், மாற்றான் வலியும், துணைவலியும் சேர்த்து செயல்பட வேண்டும் என்ற வள்ளுவரது அரசியல் நெறியை அறியாததுதான்." "இதே நிலை நீடித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்" வேம்பு நாட்டு நாடாள்வார் விளக்கம் கோரினார். "இந்த நிலையை நீடிக்க விடக் கூடாது என்பதுதான் நமது விருப்பம், நோக்கம் எல்லாம். மதுரை நாயக்க மன்னரது சார்பில் எட்டையாபுரத்தான் கலகத்தை அடக்க சேதுபதி மன்னர் சென்றதினால் பலநூறு மறக்குடி தாய்மார்கள் தாலி பாக்கியத்தை இழந்தனர். அடுத்து நடைபெற்ற கன்னடப் படையெடுப்பில் இன்னும் பல ஆயிரம் தாய்மார்களது தாலி பறிபோய்விட்டது. விளைவு. இன்று காலத்தே மழை பெய்தால்கூட கழனிகளில் ஏர் பூட்டி வேளாண்மைத் தொழிலில் ஈடுபட மறவர்கள் இல்லை. எதிரிகளிடமிருந்து நமது மண்ணை காப்பதற்காக நமது மறவர்களின் குருதி கொட்டப்படுமானால் அது நாட்டுணர்வு. இதை தவிர்த்து அண்டை நாடுகளிலும் மதுரை நாயக்கரது ஏவலராக நமது சேதுபதி மன்னர் செயல்பட்டிருப்பது நமது சமுகத்தின் தன்மானத்தை தகர்த்து தலை குனிய வைத்துள்ள செயல் அலலவா? "இப்பொழுது சொல்லுங்கள். இத்தகைய இழிவான செயல்களைச் செய்து கொண்டிருக்கும் மன்னர் நமக்குத் தேவையா? மறவர்களது இரத்தம் மாற்றானது மானத்தைக் காக்க வீணாகக் கொட்டப்படவேண்டும் சிந்தித்து சொல்லுங்கள்." ஆவேசம் கொண்டவர் போலப் பேசிய பெரியவர் பேச்சை முடித்து அமர்ந்தார். சில நிமிடங்கள் குழுமி இருந்தவர்களிடையே மெளனம் |லெவியது. -